தமிழ்நாட்டில் வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதோடு, விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்களிலும் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனவை கட்டுப்படுத்துதல், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை உள்ளிட்டவைகளை பற்றி விவாதிக்க முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலர் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்று தடுப்பூசி திட்டம், கொரோனா தடுப்பு நடவடிக்கை, அண்டை மாநிலங்களின் கொரோனா உயர்வு விகிதம் ஆகியவற்றைக் குறித்து ஆலோசித்தனர்.
ஆலோசனையின் முடிவில் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் விநாயகர் சதுர்த்தி விழாவில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கடற்கரைக்கு செல்ல தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வெள்ளி சனி ஞாயிறு ஆகிய நாட்களில் கோவிலுக்கு செல்ல இருந்த தடை நீட்டிக்கப்படும் என்றும் தமிழக அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.