இன்று முதல் லாக்டௌன்! தமிழக அரசு வெளியிட்ட அடுத்த எச்சரிக்கை மணி!
கொரோனா தொற்றானது சென்ற ஆண்டை போல இந்த ஆண்டும் தொடர்ந்து பரவி தான் வருகிறது.அந்தநிலையில் பல உயிர்களை இழக்க நேரிட்டது.கொரோனாவை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் கொரோனாவின் 2வது அலை உருவாகி தொற்றை படு வேகமாக பரப்பி கொண்டு தான் வருகிறது.இந்நிலையில் மகாராஷ்டிரா,குஜராத் போன்ற மாநிலங்களில் கொரோனாவை கட்டுபடுத்த முடியாமல் மீண்டும் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு போடப்பட்டுள்ளது.
அதனையடுத்து நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட கட்சி வேட்பாளர்கள்,நடிகர்கள் மற்றும் நடிகைகள் என அனைவருக்கும் கொரோனா தொற்றானது உறுதியாகியுள்ளது.தற்போது கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வருவதால்,அதிக அளவு பாதிப்புள்ள மாநில அரசுகளுடன் நரேந்திர மோடி நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.அதில் மத்திய அரசு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வெளியிட்டுள்ளது. அப்போது மத்திய அரசு தரப்பில் கூறியதாவது:
பேருந்து,திரையரங்குகள்,கடைகள் என மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் 50% மட்டுமே இருக்கும் படி அனுமதி தந்துள்ளனர்.அதோடு உழவர் சந்தைகளில் சில்லரை வியாபாரங்களுக்கு தடை விதித்தனர்.மேலும் வெளி மாநிலங்களிலிருந்து வரும் நபர்கள் கண்டிப்பாக இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.பூங்காக்கள்,கேளிக்கை விடுதிகள் என அனைத்து இடங்களிலும் 50% சதவீதம் மட்டுமே அனுமதி,ஆட்டோக்க்களில் ஓட்டுனர் தவிர 2 பேர் மட்டுமே பயணம் செய்ய அனுமதி.அதேபோல வாடகை கார்களில் செல்பவர்கள் கார் ஓட்டுனரை தவிர 3 பேர் மட்டுமே பயனம் செய்ய அனுமதி என அறிவித்திருந்தனர்.
இவ்வாறு பல்வேறு தளர்வுகள் கூடிய ஊரடங்கை மத்திய அரசு வெளியிட்டது.மத்திய அரசு போட்ட இந்த விதிமுறைகளில் சில விதிமுறைகளுக்கு மக்கள் போராட்டக் கொடியை நீட்டினர்.அதாவது உழவர் சந்தைகளில் சில்லறை கடைகளுக்கு தடை விதித்துள்ளது.இதனால் சில்லறை வியாபாரிகளின் வியாபாரம் பாதிக்கப்படுவதோடு,அவர்கள் அன்றாடம் வாழ்க்கை நடத்துவதே கேள்வி குறியாகிவிடும்.
அதனால் நேற்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லறை வியாபாரிகள் அனைவரும் அந்த தடையை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.அனைத்திற்கும் கூட்டம் கூடுவதை தடை விதித்த மத்திய அரசு மதுக்கடைகளுக்கு மட்டும் எவ்வித தடையையும் போடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.காய்கறிகளை விட மது முக்கியமா என்றும் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவது போல மக்களுக்கு தோன்றுகிறது.அதனையடுத்து நம் தமிழக அரசு புதிய அபராத விதிகளை நேற்று வெளியிட்டது.இனி சென்னையில் பொது இடங்களில் எச்சில் துப்பினால்,மாஸ்க் அணியாவிட்டால் அல்லது சமூக தனிமனித இடைவெளி இல்லாமல் நடந்து கொண்டால் ரூ.500 அபராதம் என தெரிவித்துள்ளனர்.
இதே போல தான் தெலுங்கான முதல்வர் சந்திரசேகர ராவ் அம்மாநிலத்தில் அனைவரும் முறையாக விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக மாஸ்க் அணியாவிட்டால் 1000 ரூபாய் அபராதம் என தெரிவித்துள்ளார்.இதேபோல நம் தமிழ்நாடு அரசும் தற்போதுள்ள இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மக்கள் முறையாக பின்பற்றாவிட்டால் அடுத்ததாக இரவு நேர ஊரடங்கு போடப்படும் என எச்சரிக்கை மணி அடித்துள்ளது.