மாவட்ட வாரியாக கட்டுப்பாடுகளை அறிவிக்கலாம்! மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அதிரடி உத்தரவு!

0
99

தமிழ்நாட்டில் கட்டுப்பாட்டுடன் கூடிய ஊரடங்கு வரும் 23ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. நோய்த்தொற்று பரவாமல் கட்டுப்படுத்துவதற்காக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கட்டுப்பாடு விதிமுறைகளை அறிவிக்கலாம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து ஒரு சில மாவட்டங்களில் பல கட்டுப்பாடுகளை மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், கோவை மாவட்டத்தில் அதிகரித்துவரும் நிறுத்தத்தில் பாதிப்பை கட்டுப்படுத்தும் விதத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த 2ஆம் தேதி முதல் நான்காம் தேதி வரையில் காய்கறிகள், மீன் மற்றும் இறைச்சி கடைகள், மதுபானக் கடைகள் உணவகங்கள், உள்ளிட்டவற்றுக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருக்கிறது.

அதேபோல வணிக வளாகங்கள், பூங்காக்கள், கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட கிராஸ்கட் சாலை நூறடி சாலை ,காந்திபுரம் 5 ,6 ,7 உள்ளிட்ட தெருக்களில் இயங்கிவரும் அத்தியாவசிய கிடைகளன மருந்தகம், பால் உள்ளிட்ட கடைகளில் தவிர்த்து மற்ற கடைகளுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்துகொண்டிருக்கிறது. நோய் தொற்றை கட்டுப் படுத்தும் விதத்தில் மாவட்ட நிர்வாகம் முன்னெடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளையும் பொதுமக்கள் அனைவரும் முறையாக பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டிருக்கிறது.

Previous articleஅரசு பேருந்து இவ்வளவு தூரம் சென்றால் அரசுக்கு எவ்வளவு நஷ்டம் தெரியுமா? – நிதி அமைச்சர்!
Next articleமுன்னாள் அமைச்சர் பாஜகவில் இணைகிறாரா? எடப்பாடி பழனிச்சாமி ருசிகர பதில்!