தமிழகத்தில் ஊரடங்கை மேலும் நீட்டிக்க முடிவு?

0
123

கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு, நான்காவது முறையாக வரும் மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதற்கு முந்தைய ஊரடங்கை போல் அல்லாமல் கொரோனா நோய் தொற்று அதிகமுள்ள இடங்களைத் தவிர பிற இடங்களில் பல ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் வரும் 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வருவதையடுத்து கொரோனா சிகிச்சையை மேம்படுத்தவும், கொரோனா பரவலை தடுக்க அரசுக்கு ஆலோசனைகளை வழங்கவும் அமைகப்படுள்ள சிறப்பு மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கூட்டத்தில் சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர், முக்கிய அமைச்சர்கள் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர், கொரோனா சிறப்பு அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது.

நாள் தோறும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க இந்த குழு பரிந்துரைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குழுவுடனான ஆலோசனைக்கு பின்னர் முதல்வரிடமிருந்து மேலும் சில முக்கிய அறிவிப்புகள் வெளிவர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Previous articleகொரோனா பாதிப்பு – இந்தியாவிடம் கடன் கேட்கும் இலங்கை
Next articleஸ்டாலின் முன் ஜாமீன் எடுத்து கொள்வது நல்லது – H ராஜா