தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள் முடக்கம்! ஊழியர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

Photo of author

By Parthipan K

தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள் முடக்கம்! ஊழியர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

Parthipan K

lockdown-of-government-offices-across-tamil-nadu-will-action-be-taken-against-the-employees

தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள் முடக்கம்! ஊழியர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இப்பொழுது திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளும் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது. எதிர்பார்த்தப்படியே திமுக ஆட்சிக்கு வந்தது அதனைத் தொடர்ந்து திமுக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.

அனைத்து இடங்களுக்குமான போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டு தொழில் நிறுவனங்கள் முடங்கியது. அதனைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் மீண்டும் மக்கள் அவர் அவர்களின் இயல்பு நிலைக்கு திரும்பி வந்தனர்.

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் பழைய ஓய்வூதிய திட்டம், காலமுறை ஊதியம், ஆறு லட்சம் காலி பணியாளர்களை நிரப்ப வேண்டும், மற்றும்  சத்துணவு , அங்கன்வாடி பணியாளர்களுக்கு 7500 ஓய்வூதியம் வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழக முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதனால் இன்று அரசு அலுவலகங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் வேலை நிறுத்தத்தில்  ஈடுபடும் ஊழியர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அண்மையில் தமிழக அரசு எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.