பாண்டியன் ஸ்டோர் கதிர் நடித்துள்ள படத்தின் போஸ்டர் ரிலீஸ்!! கைல தம்முடன் கெத்தாக போஸ் கொடுத்த பிரபல நடிகை!!

0
150

பல முன்னணி கலைஞர்களை உருவாக்கிய பெருமைக்குரிய விஜய் டிவி, தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தனது நடிப்பின் மூலம் பட்டைய கிளப்பி வரும் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் குமரன் நடித்துள்ள லாபம் என்ற முன்னோட்ட படத்தின்  போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்தப்படத்தில் கதிருக்கு ஜோடியாக விஜய் டிவியின் மற்றொரு பிரபலமான சுனிதா களமிறங்கியுள்ளார். சுனிதா ஜோடி நம்பர்1 நிகழ்ச்சியில் டான்ஸராக பெரிதும் பிரபலமானார்.

பைலட் ஃபிலிம் என அழைக்கப்படும் முன்னோட்ட படமான  இந்த “லவ் டவுன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியான நிலையில் அதில் சுனிதா கையில் தம்முடன் கெத்தாக போஸ் கொடுப்பார்.தற்போது இந்த லாக் டவுன் படத்தின் மற்றொரு போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் கதிர்  லாக் டவுன் காலகட்டத்தில் மன உளைச்சலில் இருக்கும் இளைஞர்களை போல காட்சியளிக்கிறார்.

கிட்டத்தட்ட 80%  படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இந்தப் படத்தை பில்லா  இயக்கியுள்ளார். கூடிய விரைவில் இந்த படம் திரையிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Previous articleஇத்தனை மில்லியன் பேருக்கு இணையம் வழி கல்வி வசதி இல்லையா?
Next articleநியூஸிலாந்தின் விமான நிறுவனங்களுக்கு இத்தனை மில்லியன் டாலர் நஷ்டமா?