ஊரடங்கு நீட்டிக்கப்படுமா..?? அல்லது தளர்வுகள் அறிவிக்கப்படுமா..?? எதிர்பார்ப்பில் பொதுமக்கள்..!!

Photo of author

By Parthipan K

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் ஊரடங்கில் தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை இன்று நடத்த உள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டன. இதையடுத்து பொது மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், நாட்டின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டும் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகளை அறிவித்து வந்தது. வரும் 31ம் தேதியுடன் தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு முடியயுள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை இன்று நடத்த உள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் இன்று காலை காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். இதைத்தொடர்ந்து மருத்துவ நிபுணர் குழுவுடனும், சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் மதியம் ஆலோசனை நடத்த உள்ளார். ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிப்பது, தியேட்டர்கள் திறப்பது, சென்னை புறநகர் ரயில் சேவை இயக்குவது, பள்ளிகள் திறப்பது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பண்டிகை காலம் நெருங்கி வருவதால் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.