ஊதியத்துடன் விடுமுறை இல்லையென்றால் லாக்கப் தான்! முதலாளிகளுக்கு ஷாக் கொடுத்த தமிழக அரசு!

Photo of author

By Rupa

ஊதியத்துடன் விடுமுறை இல்லையென்றால் லாக்கப் தான்! முதலாளிகளுக்கு ஷாக் கொடுத்த தமிழக அரசு!

தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரம் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இந்நிலையில் மக்கள் அனைவரும் ஓட்டு போட மிகவும் ஆவலுடன் இருக்கின்றனர்.ஆனால் அரசு வேலைையில் உள்ளவர்களுக்கு  மட்டும் தேர்தலன்று ஊதியத்துடன் விடுமுறை தருகிறது.தனியார் துறையில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு அவ்வாறு எவ்வித சலுகைகளும் பெரும்பாலான நிறுவனங்கள் வழங்குவது இல்லை.

அதனால் சேலத்தை சேர்ந்த ஷாஜகான் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார்.அதில் அவர் கூறியுள்ளதாவது, தேர்தல் நாள் அன்று வாக்களிப்பதற்காக தனியார் நிறுவனங்களில் பணி புரிபவர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.இல்லையென்றால் அந்த தனியார் நிறுவனத்தின் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தேர்தலன்று தனியார் துறையில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டு.இல்லையென்றால் அந்த நிறுவனத்தின் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கும்,தமிழ்நாடு அரசிற்கும்  ஆணை பிறப்பித்துள்ளது.

இந்த செய்தி வெளியானதும் தனியார் துறையில் வேலை செய்யும் ஊழியர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளனர்.அதுமட்டுமின்றி சோஷியல் மீடியாவில் இதுக்குறித்து அதிக படியான மீம்ஸ்கள் மற்றும் கேளி,கிண்டல் செய்யும் வகையில் பதிவிட்ட கருத்துக்களும் வைரலாகி வருகிறது.