நாடாளுமன்றம் கவர்ச்சிகரமான இடமா? காங்கிரஸ் எம்பியின் கருத்தால் வெடித்தது சர்ச்சை!

Photo of author

By Sakthi

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமானது இதனால் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த சக நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒருவரை ஒருவர் நேற்று சந்தித்துக் கொண்டார்கள். அப்போது காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் 6 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் என்று சொல்லப்படுகிறது.

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோதிமணி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நுஸ்ரத் ஜஹான் மற்றும் மிமி சக்கரவர்த்தி பிரமிட் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா சுலே, உள்ளிட்டோருடன் புகைப்படத்தை எடுத்துக் கொண்டார் என்று சொல்லப்படுகிறது. அந்த புகைப்படத்தை தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசிதரூர். அதில் மக்களவை வேலை பார்ப்பதற்கு கவர்ச்சிகரமான இடமில்லை என்று யார் சொன்னது என்று காலை என்னுடைய எம்.பிக்கள் என குறிப்பிட்டு எழுதியிருந்தார் சசிதரூர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையையும் உண்டாக்கியது.

அவருடைய இந்த பதிவு பெண்களை அதிலும் குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களை இழிவுபடுத்தும் விதத்திலும் அவர்களுடைய கண்ணியத்தை குலைக்கும் விதத்திலும் இருப்பதாக சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்தார்கள். மக்களவை என்பது பெண்களுடன் செல்பி எடுப்பதற்கு பெண்கள் கவர்ச்சிகரமான வர்கள் என்று அழைப்பதற்கும் இல்லை வருங்கால நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தவறான முன்னுதாரணமாக இருந்து விடாதீர்கள் என்று ஒரு சிலர் தெரிவித்து இருந்தார்கள்.

அவர்களுடைய கருத்திற்கு வருத்தம் தெரிவித்து இருந்த சசிதரூர் இந்த செல்பி முயற்சியில் நல்ல நகைச்சுவையுடன் எடுக்கப்பட்டது, அதே உணர்வில் அதை சமூக வலை தளத்தில் பதிவிடும் படி அவர்கள் என்னை கேட்டுக் கொண்டார்கள். சிலருடைய மனம் புண்பட்டு இருப்பதற்கு நான் வருந்துகிறேன் ஆனால் இந்த பணியிட தோழமை நிகழ்ச்சியில் பங்கேற்று கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன் இதெல்லாம் அவ்வளவுதான் என்று கூறியிருக்கிறார்.