மக்களவை தேர்தல் முடிவுகள் 2024: தமிழகத்தில் திமுக முன்னிலை அதிமுகவுக்கு பின்னடைவு 

Photo of author

By Anand

மக்களவை தேர்தல் முடிவுகள் 2024: தமிழகத்தில் திமுக முன்னிலை அதிமுகவுக்கு பின்னடைவு 

Anand

Lok Sabha Election 2024 Results in Tamilnadu மக்களவை தேர்தல் முடிவுகள் 2024

மக்களவை தேர்தல் முடிவுகள் 2024: தமிழகத்தில் திமுக முன்னிலை அதிமுகவுக்கு பின்னடைவு

நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் முதல்கட்டமாக தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 102 தொகுதிகளுக்கான வாக்கு பதிவானது கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்றது. அந்த வகையில் இதில் தமிழகத்தில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி 1 என 40 தொகுதிகளுக்கான வாக்கு பதிவும் நடைபெற்றது.

இந்நிலையில் அனைத்து கட்ட வாக்குப்பதிவும் முடிவுற்ற நிலையில் நாடு முழுவதும் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. அந்தவகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு தற்போது அடுத்தடுத்த சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தேர்தல் ஆணைய அறிவிப்பின் படி தமிழகத்தில் திமுக கூட்டணியானது 34 இடங்களிலும், பாஜக கூட்டணியில் போட்டியிட்ட பாமக 1 தொகுதியிலும், அதிமுக 2 தொகுதியிலும் முன்னிலை வகிக்கிறது.