எம்.பி மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று!

Photo of author

By Parthipan K

கன்னியாகுமரி லோக்சபா தொகுதி எம்.பி வசந்த குமார் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை, திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ அன்பழகன் கொரோனா வைரஸ் பாதித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில்தான் வசந்தகுமார் எம்.பி.க்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது மனைவிக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இருவரும் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாகை, மயிலாடுதுறை, சிவகங்கை எம்.பி.க்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இப்போது இந்த பட்டியலில் வசந்தகுமார் எம்.பி.யும் சேர்ந்துள்ளார்.