தாக்கல் செய்யப்பட்ட 3 விவசாய மசோதாக்கள்! விவசாயிகளுக்கு பயன் அளிக்குமா?

0
195

இன்று நாடாளுமன்றத்தில் மத்திய விவசாயத்துறை அமைச்சர் 3 விவசாயம் மசோதாக்களை தாக்கல்  செய்துள்ளார். விவசாயிகள் விளைபொருள் வர்த்தக மேம்பாடு மற்றும் வசதிக்கான மசோதா, விளைபொருள் விலை உத்தரவாதத்துக்கான பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றும் அதிகாரமளித்தல் மசோதா, விவசாய சேவை மசோதா ஆகியவை அந்த மூன்று மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

நாட்டில் 86% மக்கள் 2 ஏக்கர் நிலத்தை விட குறைவான நிலத்தை வைத்திருப்பார்கள். அவர்களுக்கு ஆதார விலையால் எந்த ஒரு பயனில்லை எனவே, விவசாயி தனது விளைபொருளுக்கு விலையை அவரே முடிவு செய்ய இந்த மசோதா வகை செய்வதாக அமைச்சர் தோமர் கூறியுள்ளார்.

விளைபொருளுக்கு விலையை வர்த்தகர்கள் மற்றும் இடைத்தரகர்கள் தீர்மானிக்கும் நிலையை மாற்றி விவசாயிக்கு அந்த அதிகாரம் கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் விவசாயத்தில் முதலீட்டை கவரவும் மற்றும் தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்யவும் விவசாயிகளுக்கு ஊக்கம் அளித்து பயன்தரும் வகையிலேயே இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என அமைச்சர் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது ஏன்?

விவசாயம் மற்றும் சந்தைகள் மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டவை என்றும் இதில் மத்திய அரசு தலையிடுவது கூட்டாட்சிக்கு எதிரானது என்றும் எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.மசோதாக்கள் நிறைவேற்றபட்டு சட்டம் ஆனால் குறைந்தபட்ச ஆதார விலையை கூட விவசாயிகள் பெற முடியாது என்று எதிர் கட்சிகள் தெரிவித்துள்ளன.

மேலும் மாநில அரசுக்கு வரும் கட்டணம், வரிகள் கிடைக்காமல் போய்விடும் என அச்சம் தெரிவித்துள்ளனர்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் நேரடியாக விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு குறைந்த விலையில் வாங்குவதோடு மேலும் எந்த பயிரை பயிரிட வேண்டும் என்பதையே தீர்மானிப்பார்கள் என்று கூறியுள்ளார்கள்.

மேலும் இந்த தீர்மானம் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றும் ஆதார விலையை தொடரப்படும் என்றும் மசோதாக்களின் அம்சங்களை முழுமையாக அறிந்து கொள்ளும்முன் அவற்றை எதிர்க்க வேண்டாம் என்றும் எதிர்க்கட்சிகளை அமைச்சர் தோமர் கேட்டுக் கொண்டார்.

Previous articleமாவட்ட செயலாளர் பதவியிலிருந்து பொன்முடி விலகல்! புதியவர் நியமனம்
Next articleஇனி இந்த நாட்களில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை..! தமிழக அரசு அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here