அவைத்தலைவர் நாற்காலியின் மீது காகிதங்களை எரிந்த விவகாரம்! கடுமையாக எச்சரித்த சபாநாயகர்!

Photo of author

By Sakthi

நாடாளுமன்றத்தின் மதிப்பை குறைக்கும் விதத்தில் நடக்கும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது என்று மக்களவை சபாநாயகர் எதிர்கட்சி உறுப்பினர்களை எச்சரிக்கை செய்திருக்கிறார்.பெகாசஸ் செயலின் மூலமாக தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் காரணமாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடர்ச்சியாக எதிர்க்கட்சியினர் முடக்கப்பட்டு வருகின்றது. கூட்டத்தொடரில் பெகாசஸ் விவகாரம் மற்றும் வேளாண் சட்டம் விவசாயிகளின் போராட்டம், அதோடு விலை உயர்வு போன்ற பல்வேறு பிரச்சனைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், பெகாஸஸ் குறித்து விளக்கம் அளிப்பதற்கு முயற்சி செய்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவின் கையில் இருந்த பேப்பரை பிடிங்கி கிழித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். அதேபோல நேற்றைய தினமும் காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் காகிதங்கள் மற்றும் கோப்புகளை கிழித்து அவைத் தலைவரின் இருக்கையின் மீது போட்டு இருக்கிறார்கள். அதோடு அமைச்சர்கள் மீதும் காகிதங்களை வீசியிருக்கிறார்கள். இதனால் அவை ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.

தொடர்ச்சியாக இப்படி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆரம்பித்த நாளிலிருந்து நாடாளுமன்றத்தை செயல்பட விடாமல் எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்கள் தொடர்ச்சியாக அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள்.இதனையடுத்து இன்று காலை 11 மணி அளவில் மக்களவை ஆரம்பித்தவுடன் நேற்று நடைபெற்ற சம்பவத்திற்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்தார்கள். எதிர்க்கட்சியினரின் அமளி காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டது.

அதற்கு முன்பாக உரையாற்றிய சபாநாயகர் ஓம் பிர்லா நேற்றையதினம் சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது. அதோடு நாடாளுமன்றத்தில் விதிமுறைகளுக்கு எதிராக அவர்கள் செயல்ப்பட்டு இருக்கிறார்கள். தலைவர் மீது ஏதாவது புகார்கள் இருந்தால் அது தொடர்பாக என்னிடம் தெரிவிக்கலாம். அதை தவிர்த்துவிட்டு நாற்காலியில் காகிதங்களை எறிவது ஏற்புடையது கிடையாது இங்கே இருக்கின்ற பிரதிநிதிகள் லட்சக்கணக்கான பொது மக்களின் பிரதிநிதிகளாக இங்கே வந்திருக்கிறார்கள் இதைப் போன்ற சம்பவங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. சபையின் மாண்பை குறைக்கும் விதத்தில் உறுப்பினர்கள் தொடர்ச்சியாக நடந்து கொண்டால் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை செய்தார்.

இதனை தொடர்ந்து இரண்டு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்ட உடன் இரு அவைகளின் எதிர்க்கட்சித் தலைவர்களை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோர் சந்தித்தார்கள். அந்த சமயத்தில் நாடாளுமன்ற கூட்டத்தை அமைதியான முறையில் நடத்தவும், மசோதாக்களை நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும், மத்திய அமைச்சர்கள் கோரிக்கை வைத்தார்கள் என்று தெரிகிறது.இதற்கு எதிர் கோரிக்கை வைத்த எதிர்க்கட்சித் தலைவர்கள் நாடாளுமன்றத்தின் பெகாஸஸ் விவகாரம் மற்றும் பணவீக்கம் விவசாயிகள் பிரச்சனை போன்றவற்றை குறித்து விவாதம் செய்வதற்கு வலியுறுத்தி இருக்கிறார்கள்.