விஜய், கமல், கார்த்தி என அடுக்கடுக்காக படங்களுக்கு புக் ஆகும் இளம் இயக்குனர்

Photo of author

By CineDesk

விஜய், கமல், கார்த்தி என அடுக்கடுக்காக படங்களுக்கு புக் ஆகும் இளம் இயக்குனர்

CineDesk

Updated on:

விஜய், கமல், கார்த்தி என அடுக்கடுக்காக படங்களுக்கு புக் ஆகும் இளம் இயக்குனர்

மாநகரம் என்ற ஒரே ஒரு திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அந்த படம் ஏற்படுத்திய பரபரப்பை அடுத்து கார்த்தியின் ’கைதி’ என்ற படத்தை இயக்கினார். இந்த படம் விஜய்யின் பிகில் என்ற மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான பிரம்மாண்டமான படத்துடன் வெளியானது. இருப்பினும் பிகில் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் விமர்சனங்களை விட அதிகமான பாசிட்டிவ் விமர்சனங்களை ’கைதி திரைப்படம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் நடித்து வரும் ’தளபதி 64 என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க பெரிய நடிகர்கள் பலர் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சூர்யா, தனுஷ் ஆகியோர் லோகேஷ் கனகராஜை அழைத்து கதை கேட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது

ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ’கைதி 2’ திரைப்படத்தில் தான் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாக சமீபத்தில் கார்த்தி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே கமல், கார்த்தி, விஜய், சூர்யா, தனுஷ் என அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது