ஜாக்பாட் அடிக்கப்போகும் லோகேஷ்! எல்லாத்துக்கும் காரணம் கூலி படம் தான்!

0
18
Lokesh Kanakaraj Rajinikanth
Lokesh Kanakaraj Rajinikanth

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கூலி படத்தை எடுத்து முடித்து விட்டார். படம் ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த கூலி படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜூனா, கன்னட நடிகர் உபேந்திரா, சத்யராஜ், ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமீர் கான் போன்ற முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த கூலி படம் LCU விற்குள் வராது என ஏற்கனவே லோகேஷ் அறிவித்துவிட்டார். இந்த படத்தின் முதல் பாதியை அண்மையில் பார்த்த ரஜினிகாந்த் படம் அருமையாக வந்துள்ளது. படம் பக்கா மாஸ் என லோகேசை வெகுவாக பாராட்டியுள்ளார் ரஜினிகாந்த்.

அதேபோல லோகேசுடன் வேலை செய்த அமீர் கானுக்கு லோகேசூடன் வேலை செய்வது ரொம்ப பிடித்து விட்டதாம். தனது அடுத்த படத்தை லோகேஷ் தான் இயக்க வேண்டும் என்று லோகேசை புக் செய்துவிட்டார் ஆமீர் கான். லோகேஷ் மற்றும் ஆமீர் கான் இணையும் படத்திற்கான வேலைகள் அடுத்த வருடம் தொடங்கும் என அண்மையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்துள்ளார் லோகேஷ். இந்த லோகேஷ் அமீர் கான் கூட்டணியில் உருவாகும் படம் சூப்பர் ஹீரோ subject என்றும் சொல்லப்படுகிறது.

Previous articleவிஜய் பிறந்தநாளில் ரசிகர்களை குஷிப்படுத்த எதுவும் இல்லையா? உண்மை இதுதான்!
Next articleகுடும்ப பிரச்சனையால் குழப்பத்தில் பாமக தொண்டர்கள்! இதெல்லாம் எங்கபோய் முடியப்போகுதோ?