KH234 படம் பற்றி அப்டேட் கேட்ட லோகேஷ் கனகராஜ்!! இயக்குநர் மணிரத்னம் கூறிய பதிலை பாருங்க!!!

0
39
#image_title

KH234 படம் பற்றி அப்டேட் கேட்ட லோகேஷ் கனகராஜ்!! இயக்குநர் மணிரத்னம் கூறிய பதிலை பாருங்க!!!

நடிகர் கமல்ஹாசன் அவர்கள் அடுத்ததாக நடிக்கவிருக்கும் திரைப்படமான KH234 திரைப்படத்தை பற்றிய அப்டேட் வேண்டும் என்று இயக்குநர் மணிரத்னம் அவர்களிடம் இயக்குநர் மகேஷ் கனகராஜ் அவர்கள் கேட்டதற்கு இயக்குநர் மணிரத்னம் வேடிக்கையாக பதில் அளித்துள்ளார்.

2022ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான சைமா விருதுகள் அளிக்கும் விழா துபாயில் நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் திரையுலகின் பல நடிகர்களும் கலந்து கொண்டுள்ளனர். சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த பாடகர், சிறந்த பாடகி, சிறந்த நகைச்சுவை நடிகர் பான்ற பல பிரிவுகளின் கீழ் சைமா விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மணிரத்னம் அவர்களிடம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் நடிக்கும் 234வது படமான KH234 திரைப்படம் பற்றிய அப்டேட் கேட்டுள்ளார். அதற்கு இயக்குனர் மணிரத்னம் அவர்கள் “நான் திரைப்படத்தின் இயக்குனர் மட்டும் தான். திரைப்படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன் இங்கு இருக்கிறார். அவர்களிடம் கேளுங்கள்” என்று கூறியுள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் கேட்டதற்கு பதில் அளித்த நடிகர் கமல்ஹாசன் அவர்கள் “ஒரு நிஜமான ரசிகர் என்ன செய்ய வேண்டுமோ அதை இயக்குநர் மணிரத்னம் அவர்கள் செய்துள்ளார். நான் இந்த படத்திற்காக தாடி வளர்த்து வருகின்றேன். நாயகன் திரைப்படதில் எடுக்கும் பொழுது எப்படி அவசரம் இல்லாமல் வேலை செய்தும் அதே போல தற்பொழுது எந்தவொரு அவசியமும் இல்லாமல் வேலை செய்து வருகிறோம். எங்களுடைய நோக்கம் ஒரு நல்ல படத்தை உருவாக்குவது. மேலும் நல்ல படத்தை உருவாக்கி ரசிகர்களிடம் பாராட்டுகள் பெறுவது ஆகும்” என்று கூறியுள்ளார்.