Cinema

ரஜினி + லோகேஷ் + கமல் ! கோலிவுட்டை வியப்பில் ஆழ்த்திய கூட்டணி !

Photo of author

By Parthipan K

ரஜினி + லோகேஷ் + கமல் ! கோலிவுட்டை வியப்பில் ஆழ்த்திய கூட்டணி !

ரஜினி நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாகவும் அதை கமல் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

லோகேஷ் கனகராஜின் வளர்ச்சி தமிழ் சினிமா ரசிகர்களை வியக்க வைக்கும் அளவுக்கு நாளுக்கு நாள் எகிறிக்கொண்டு போகிறது. மாநகரம் படத்தில் மக்களுக்கு அறிமுகமில்லாத நடிகர்களை வைத்து இயக்கி ஹிட் அடிக்க வைத்த அவர், இரண்டாவது படத்தில் கார்த்தியுடன் சேர்ந்து கைதி எடுத்து சூப்பர் ஹிட்டைக் கொடுத்தார்.

அதனை அடுத்து தனது மூன்றாவது படத்தில் இப்போது தளபதி விஜய்யை இயக்கிக் கொண்டு இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடியும் முன்னரே 200 கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்யபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் மாஸ்டர் படம் முடியும் முன்னரே அடுத்த படத்தில் ரஜினியை இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தை கமல் தனது ராஜ்கமல் நிறுவனம் மூலம் தயாரிக்க இருக்கிறார் என்றும் அதில் அவரும் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. எப்படி ஆயினும் அதுதான் ரஜினி நடிக்கும் கடைசிப் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த செய்தி வெளியானதில் கோலிவுட் ரசிகர்கள் ரஜினியையும் கமலையும் ஒன்றாக திரையில் பார்க்கும் நாள் என்று வருமோ என ஆர்வமாகக் காத்துக் கிடக்கின்றனர்.

வேலம்மாள் கல்லூரியில் கணக்கில் வராத 400 கோடி சொத்துகள்! பிரித்து மேய்ந்த புலனாய்வு துறையினர்!!

தோனியின் இடத்தை நிரப்புகிறாரா ஸ்ரேயாஸ் ஐயர் ? பலமாகும் நடுவரிசை !

Leave a Comment