மக்களவை தேர்தல் முடிவுகள் 2024: தேசிய அளவில் பாஜக முன்னிலை! இண்டியா கூட்டணிக்கு பின்னடைவு
கடந்த ஏப்ரல் மாதம் ஆரம்பித்து 7 கட்டங்களாக நடத்தப்பட்ட 18 வது மக்களவைக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று ஜூன் 4 ஆம் தேதி காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. இன்று காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை கணக்கிடும் பணியானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
முதலில் எண்ணப்பட்ட தபால் வாக்குகள் கணக்கின்படி தேசிய அளவில் பாஜக கூட்டணி 279 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 212 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில் குஜராத் மாநிலம் சூரத் தொகுதி பாஜகவின் வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்தவகையில் மீதமுள்ள 542 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையானது அடுத்தடுத்த சுற்றுக்கள் மூலமாக எண்ணப்பட்டு வருகிறது.
தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் பாஜக முன்னிலை வகித்து வருவது காங்கிரஸ் கட்சிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது.