நடுவானில் விமானத்திற்குள் திடீர் புகை: 169 பயணிகள் கதி என்ன?

Photo of author

By CineDesk

இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு சென்று கொண்டிருந்த விமானம் ஒன்று 5000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமானத்திற்குள் புகை பரவியதால் விமான ஊழியர்கள் மற்றும் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர் அந்த விமானத்தில் 169 பயணிகள் பயணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை ரோம் நகரில் இருந்து லண்டனுக்கு ஒரு விமானம் சென்று கொண்டிருந்தது. அதில் 169 பயணிகள் பயணம் செய்துகொண்டிருந்தனர். இந்த நிலையில் விமானம் 5000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமானத்தின் கேபினில் முதலில் புகை கிளம்பியது. அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அந்த புகை பரவி பயணிகள் இருக்கும் இடத்திற்கும் வந்தது. இதனால் பயணிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

விமானத்தின் ஏதாவது ஒரு பகுதியில் தீப்பிடித்து அதன் காரணமாகவே புகை கிளம்பியதோ என்ற பயம் அனைவருக்கும் ஏற்பட்டது. இதனை அனைத்து அருகில் உள்ள விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்ட விமானி, விமானத்தை தரையிறக்க அனுமதி கேட்டனர். அனுமதி கிடைத்ததை அடுத்து அடுத்த சில நிமிடங்களில் விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

உடனடியாக அந்த விமானம் சோதனை செய்யப்பட்டு வருவதாகவும், புகை கிளம்பியதற்கான காரணத்தை ஊழியர்கள் ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் 169 விமான பயணிகளுக்கும் மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.