தலைமுடி உதிராமல் அடர்த்தியாக நீண்டு வளர வேண்டுமா? இப்படி தலை குளித்தாலே போதும்!

Photo of author

By Pavithra

தலைமுடி உதிராமல் அடர்த்தியாக நீண்டு வளர வேண்டுமா? இப்படி தலை குளித்தாலே போதும்!

Pavithra

தலைமுடி உதிராமல் அடர்த்தியாக நீண்டு வளர வேண்டுமா? இப்படி தலை குளித்தாலே போதும்!

அனைத்து பெண்களுக்கும் தலை முடி கொட்டுகிறது என்ற கவலையும் அடர்த்தியாக இல்லை என்ற கவலையும் அதிகம் இருக்கும்.இதற்கென பற்பல ஷாம்புகளையும் பயன்படுத்தி பயன் கிடைக்கவில்லையா? கவலை வேண்டாம் இந்த முறையில் மட்டும் ஒரு மாதம் தலை குளித்தால் போதும் உங்க முடி நீண்டு அடர்த்தியாகவும் கொட்டாமலும் வளரும்.

தேவையான பொருட்கள்:

தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய்.

தேங்காய் எண்ணெயையும் விளக்கெண்ணெய்யும் சம அளவு ஒரு டம்ளரில் எடுத்துககொள்ள வேண்டும்.பின்பு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சிறிதளவு சூடேறிய பிறகு எண்ணெயுள்ள டம்ளரை வைத்து எண்ணையை ஆவில் கை பொறுக்கும் அளவு சூடும் வரும் வரை விடவும்.

பின்பு இந்த எண்ணையை எடுத்து முடியின் வேர்க்காலியில் படும் வரை நுனி மூடி வரை தேய்த்து அரை மணி நேரம் அப்படியே விட்டுவிட வேண்டும்.பிறகு நீங்கள் பயன்படுத்தும் சாம்பை கொண்டு தலையை நன்றாக அலசி விட்டு, முடியை நன்றாக காய வைக்க வேண்டும்.இந்த முறையை வாரத்திற்கு ஒரு நாள் விதம் மாதத்திற்கு நான்கு முறை செய்தாலே போதும் உங்கள் முடி உதிர்வுநின்று கூந்தல் வளர்வதை கண்கூட காணலாம்.