பெண்ணுக்கு அதிக நீளமாக வளர்ந்த தாடி… கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த தாடிப்பெண்…
அமெரிக்கா நாட்டில் பெண் ஒருவருக்கு நீளமாக தாடி வளர்ந்து வந்துள்ளது. இதையடுத்து உலகிலேயே மிக நீளமான தாடி வைத்துள்ள முதல் பெண் என்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
தற்போது இருக்கும் ஆண்கள் அனைவருக்கும் அவர்கள் நினைக்கும் படி அவர்களின் முகத்தில் தாடி வளர்வது இல்லை. ஒரு சிலருக்கு தாடி நன்கு அடர்த்தியாக வளரும். ஒரு சிலருக்கு தாடி மிகவும் லேசாக இருக்கும். ஒரு சிலருக்கு தாடி வளராது. ஒரு சிலருக்கு மீசை மட்டும் வளர்ந்து கொண்டே இருக்கும். மற்றும் ஒரு சிலருக்கு தாடைப் பகுதியில் மட்டுமே தாடி வளரும்.
இதையடுத்து முழவதுமாக தாடி வளராத ஆண்கள் அனைவரும் தாடியை வளர்க்க பலவிதமான சிகிச்சைகளை மேற்கொள்கிறார்கள். பல மருந்துகளை உட் கொள்கிறார்கள். பலவிதமான ஹேர் குரோத் எண்ணெய்களையும் ஆயில்களையும் முகத்தில் தேய்த்துக் கொள்கிறார்கள்.
அவ்வாறு எந்தவொரு ஆயிலோ, கிரீமோ, மருந்தோ, மாத்திரையோ இல்லாமல் அமெரிக்காவில் பெண் ஒருவர் 30 செ.மீ நீளம் தாடி வளர்த்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
அமெரிக்கா நாட்டில் வசிக்கும் 38 வயதான எரின் ஹனிக்டி என்ற பெண் தான் 30 செ.மீ நீளம் உள்ள தாடியை வைத்துள்ளார். எரின் ஹனிக்டி அவர்கள் 13 வயதில் இருக்கும் பொழுதே தாடி அவர்களுக்கு வளரத் தொடங்கியதாகவும் இதற்கு பலமுறை சிகிச்சை எடுத்தும் மீண்டும் மீண்டும் தாடி வளர்வதாக எரின் ஹனிக்டி அவர்கள் கூறியுள்ளார்.
மேலும் கணவரின் தூண்டுதலை அடுத்து நான் 30 செ.மீ நீளமுள்ள தாடியை வளர்த்தேன். மேலும் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்தேன் என்று அந்த தாடிப்பெண் எரின் ஹனிக்டி கூறினார்.