அடைக்கலம் தேடி வந்த தோழி! அதிர்ச்சி கொடுத்த கணவன் மனைவி!

Photo of author

By Sakthi

சென்னை எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு 4வது பிளாக் பகுதியில் வசித்து வரும் சுருதி என்பவருக்கும், விஜய் என்பவருக்கும், கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இதனையில் இவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் கணவன் மனைவிக்கிடையே குடும்ப தகராறு ஏற்பட்டிருக்கிறது.

இதனையடுத்து சுருதி தன்னுடைய கணவரை பிரிந்து வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது திருவெற்றியூர் என்.டி. குப்பம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ஸ்ருதியின் தோழியான ஐஸ்வர்யா என்பவர் அவருக்கு தன்னுடைய வீட்டில் அடைக்கலம் கொடுத்திருக்கிறார்.

முதலில் நன்றாக கவனித்து வந்த ஐஸ்வர்யா பின்னாளில் தன்னுடைய கணவர் சூரஜ் என்ற ஜெனிஸ் கண்ணாவுடன் சேர்ந்து சுருதியை வீட்டில் வேலைக்காரியை போல நடத்தி இருப்பதாக தெரிகிறது.

அதோடு சுருதியிடம் கருமுட்டையை விற்குமாறு கேட்டு துன்புறுத்தி வந்திருக்கிறார்கள். ஜெனிஸ் கண்ணா மற்றும் ஐஸ்வர்யா உள்ளிட்டோர் ஸ்ருதியை அடித்து கொடுமைப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், ஜெனிஸ் கண்ணா மற்றும் ஐஸ்வர்யா உள்ளிட்டோர் வெளியில் சென்ற நேரம் பார்த்து சுருதி வீட்டிலிருந்து தப்பி ஓடி வந்து தன்னுடைய கணவர் விஜய்க்கு தகவல் கொடுத்து அதன் பின்னர் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.

புகாரினடிப்படையில், திருவொற்றியூர் காவல்துறையினர் சூரஜ் என்ற ஜெனிஸ் கண்ணா மற்றும் ஐஸ்வர்யா உள்ளிட்ட இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.