இருசக்கர வாகனம் வாங்க உள்ளீர்களா? உங்களுக்கு அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Photo of author

By Parthipan K

இருசக்கர வாகனம் வாங்க உள்ளீர்களா? உங்களுக்கு அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

சண்டிகரில் மின்சாரம் அல்லாத பெட்ரோல் இருசக்கர வாகனங்களின் பதிவு நடப்பு நிதி ஆண்டின் எஞ்சிய காலத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் சண்டிகர் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையானது மக்களுக்கு பெரும்  குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. சண்டிகர் வாகன பதிவு மற்றும் உரிமம் வழங்கும் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பின்படி யூனியன் பிரதேசத்தில் பெட்ரோல் இன்ஜின் கொண்ட இருசக்கர வாகனங்களின் பதிவு பிப்ரவரி 10ஆம் தேதி முதல் மார்ச் மாதம் இறுதி வரை தடை செய்யப்பட்டுள்ளது. வாகன பதிவு குறித்து தடை காரணமாக வாகன விற்பனையாளர்கள் வாகன பதிவு பணியை கூட மகான் போர்டலில்  முடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர் என தொழில்துறை வட்டாரங்கள் கூறியுள்ளது.

மேலும் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையால் இருசக்கர வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் இனிமேல் உயர் பாதுகாப்பு எண் தகடு மற்றும் பதிவு சான்றிதழ் போன்றவற்றை பெற முடியாது. முன்பே இரு சக்கர வாகனம் வாங்கியவர்கள் அல்லது வாகனம் வாங்க திட்டமிட்டு இருப்பவர்களுக்கு சண்டிகர் அரசின் இந்த முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.