தண்டவாளத்தை கடக்க முயன்ற லாரி… இரயில் மோதி பரிதாபமாக 8 பேர் பலி!!

Photo of author

By Sakthi

 

தண்டவாளத்தை கடக்க முயன்ற லாரி… இரயில் மோதி பரிதாபமாக 8 பேர் பலி!!

 

தாய்லாந்து நாட்டில் தண்டவாளத்தை கடக்க முயன்ற லாரி மீது இரயில் மோதியதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

 

தாய்லாந்து நாட்டில் சஷொன்சா மாகணத்தில் உள்ள மூவாங் மாவட்டத்தில் இந்த இரயில் விபத்து நடந்துள்ளது. நேற்று(ஆகஸ்ட்4) அதிகாலை 3 மணியளவில் பணியாளர்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பணியாளர்களை ஏற்றிக் கொண்டு சென்ற லாரி தண்டவாளத்தை கடக்க முயன்றது.

 

அப்போது வேகமாக வந்த சரக்கு இரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற லாரி மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 பெண்கள், 5 ஆண்கள் உட்பட 8 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் இறந்த நபர்களின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பணியாளர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விபத்து ஏற்பட்டது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.