இப்போது உடல் பருமன் என்பது நிறைய பேர் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினையாகவே உள்ளது. தற்போது இருக்கும் கால சூழ்நிலை, வேலைப்பளு, உடல் உழைப்பின்மை, துரித உணவுகள் ஆகியவையே உடல் பருமனுக்கு காரணம்.
அனைவருக்கும் அவரவர் உயரத்துகேற்ப உடல் எடை இருக்க வேண்டும் என்பதே விருப்பமாக உள்ளது. என்ன செய்தாலும் உடல் எடை குறையவில்லை என புலம்பும் நாம்தான் எந்த முறை டயட்டையும் ஒழுங்காக பின்பற்றுவதில்லை.
நம் உடல் எடையை குறைப்பதில் தண்ணீருக்கு முக்கிய பங்கு உண்டு. எனவே நமது உடலுக்கு தேவையான அளவு, அதாவது நமது எடைக்கு ஏற்ப நாம் குடிக்கும் தண்ணீர் இருக்க வேண்டும் குறைந்தபட்சமாக 20 கிலோவிற்கு 1 லிட்டர் தண்ணீர் என்பது அளவாகும்.
இது குறைந்தபட்ச அளவு மட்டுமே. நமது உடல் எடை குறைவதற்கு 10 நாளில் 10 கிலோ வரை எடையை குறைக்கும் சிம்பிளான வழிமுறைகளை பார்ப்போம்.
முதல் நாள்
முடிந்த அளவுக்கு தண்ணீரை மட்டுமே அருந்துங்கள். மிகவும் குறைந்தபட்சமாக 1/2 மணி நேரத்திற்கு ஒரு தடவை உங்களால் முடிந்த அளவுக்கு தண்ணீர் குடியுங்கள். அதையும் மீறி பசி உணர்வு ஏற்படும்போது பழங்களை உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். முக்கனிகளை தவிர்த்து விடவும்.
இரண்டாம் நாள்
முதல் நாள் இரவே துளசி மற்றும் புதினாவை தண்ணீரில் ஊறவைத்து விடவும். மறுநாள் காலை முதல் தாகமெடுக்கும் போதெல்லாம் இந்த தண்ணீரை அருந்த வேண்டும். இந்த தண்ணீரை அருந்தும் போது உடலில் உள்ள நச்சுகள் வெளியேறி உடல் சோர்ந்து காணப்படுவீர்கள். அப்போது முதல் நாள் போல் பழங்களை உட்கொள்ளலாம்.
மூன்றாம் நாள்
இன்றும் தண்ணீர்தான் குடிக்க வேண்டும். வெல்லம் அல்லது கருப்பட்டி கலந்த தண்ணீரை குடிக்கவேண்டும். வேறு பானங்கள் எடுத்து கொள்வதாக இருந்தால் கிரீன் டீ, சுக்கு டீ போன்றவற்றை குடுக்கலாம்.
நான்காம் நாள்
தண்ணீர்தான் அருந்த வேண்டும். உடலுக்கு தேவையான புரத சத்திற்க்காக சைவம் அல்லது அசைவ சூப் குடிக்கலாம்.
ஐந்தாம் நாள்
இன்று குடிக்கும் தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பு, சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து குடிக்க வேண்டும். 2 லிட்டருக்கு மேல் இந்த தண்ணீரை அருந்த வேண்டும். பசிக்கும் போது பழங்கள் சாப்பிடலாம்.
ஆறாம் நாள்
பழச்சாறுகளை சர்க்கரை சேர்க்காமல் அருந்தலாம். தண்ணீரும் தேவையான அளவு குடிக்க வேண்டாம்.
ஏழாம் நாள்
காலையில் தண்ணீர் அருந்தி விட்டு, அரை மூடி தேங்காயும் சுடுதண்ணீர் குடிக்கலாம். இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கும்.
எட்டாம் நாள்
இன்று, இரண்டாம் நாளை போன்று புதினா மற்றும் துளசி கலந்த தண்ணீரை அருந்த வேண்டும். பால் சர்க்கரை கலக்காத டீ அருந்தலாம்.
ஒன்பதாம் நாள்
இன்று உடலில் உள்ள கொழுப்புகள் கரைய ஆரம்பித்திருக்கும் போது உடல் மிகவும் சோர்ந்து காணப்படும். ஆகையால் இன்று பசிக்கும் போது பழங்கள் சாப்பிட்டு சுடுதண்ணீர் அருந்தலாம்.
பத்தாம் நாள்
இன்றும் தேவையான அளவு தண்ணீர் அருந்தி சிட்ரிக் அமிலம் கலந்த எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு பழச்சாறுகளை அருந்தலாம். தண்ணீர் எந்த அளவிற்கு அறுந்துகிறோமோ அந்த அளவிற்கு உடல் எடை குறையும். இப்படி தொடர்ந்து செய்து வருவதின் மூலம் கெட்ட கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.