கல்லூரி காலத்திலேயே குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் லாஸ்லியா : இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Photo of author

By Parthipan K

கல்லூரி காலத்திலேயே குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் லாஸ்லியா : இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Parthipan K

கடந்த ஆண்டு நடந்து முடிந்த பிக்பாஸ் சீஸன்3 நிகழ்ச்சியில் பலராலும் அதிகம் கவனிக்கப்பட்டவர், பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டையும் பெற்றார் லாஸ்லியா. அவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் உருவானது, மேலும் கவினுடன் ஏற்பட்ட காதல் போன்ற சர்ச்சைகளிலும் சிக்கினார்.

அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன், லாஸ்லியா நாயகியாக நடிப்பார் என்று செய்திகள் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த மாதம்(பிப்ரவரி 3) லாஸ்லியா நாயகியாக நடிக்கும் இரண்டு படங்கள் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளன.

அதில் ஒன்று இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நாயகனாக நடிக்கும் ‘பிரண்ட்ஷிப்’ படம், இந்த படத்தில் லாஸ்லியா நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.

இந்த நிலையில் 2014ம் ஆண்டு லாஸ்லிய தனது கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் தமிழ் சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ள வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

https://youtu.be/oSX6D4dEfTc