2023 ஆம் ஆண்டு இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தால் வெளியான திரைப்படம் தான் அன்பே சிவம். இத்திரைப்படத்தில், கமல் ஹாசன், மாதவன் , கிரண் ரத்தோட் , நாசர் , சந்தான பாரதி , சீமா மற்றும் உமா ரியாஸ் கான் ஆகியோர் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
₹ 120 மில்லியன் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட அன்பே சிவம் , கம்யூனிசம் , நாத்திகம் மற்றும் நற்பண்பு போன்ற கருப்பொருள்களை எடுத்து ஹாசனின் மனிதநேய கருத்துக்களை சித்தரித்து இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், புவனேஸ்வரில் இருந்து சென்னைக்கு எதிர்பாராத பயணத்தை மேற்கொள்ளும் மாறுபட்ட ஆளுமை கொண்ட நல்லசிவம் மற்றும் அன்பரசு ஆகிய இருவரின் கதையை இப்படம் தெரிவிக்கிறது.
குறிப்பாக இத்திரைப்படம் 51வது ஃபிலிம்பேர் விருதுகள் தென்னிந்தியாவில் , சிறப்பு நடுவர் விருது மற்றும் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த நடிகர் (ஹாசன்) பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது. 2003 தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளில் மாதவன் சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் .
விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களுக்கு வெளியிடப்பட்டது, ஆனால் பாக்ஸ் ஆபிஸில் குறைவான செயல்திறன் பெற்றது . அதன் ஆரம்ப தோல்வி இருந்தபோதிலும், தொலைக்காட்சி சேனல்களில் மீண்டும் ஒளிபரப்பப்படுவதன் மூலம் பல ஆண்டுகளாக அங்கீகாரம் பெற்றது, இப்போது தமிழ் சினிமாவின் உன்னதமான மற்றும் ஒரு வழிபாட்டுத் திரைப்படமாக கருதப்படுகிறது .
இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்று தெரிவித்திருந்த இயக்குனர் சுந்தர் சி அவர்கள் கூறியிருப்பதாவது :-
அன்பே சிவம் படுத்தால எனக்கு கிடைச்ச ஆதாயத்தை விட இழப்புகள் தான் அதிகம் என மனம் வருந்தி இருக்கிறார். அதுமட்டுமின்றி, நான் ரசித்த எடுத்த திரைப்படத்தால் 1 ஆண்டு காலம் வீட்டிலேயே முடங்கி கிடக்கும்படி ஆகிவிட்டது. இப்பொழுதெல்லாம் எங்கு சென்றாலும் அன்பே சிவம் திரைப்படம் ஆனது அருமையாக இருக்கிறது ஏன் மீண்டும் அதுபோன்ற திரைப்படங்களை எடுப்பதில்லை என அனைவரும் கேள்வி எழுப்புகின்றனர் என்றும், இதனை கேட்கும் போது எனக்கு மிகவும் கோபம் வருமே தவிர சந்தோஷமாக இருக்காது என்றும் இயக்குனர் சுந்தர்சி அவர்கள் தெரிவித்து இருக்கிறார்.
இதற்குக் காரணமாக அவர் கூறியிருப்பது, திரைப்படம் திரையரங்கில் திரையிடப்பட்ட பொழுது இதற்கு யாரும் இவ்வளவு பெரிய வரவேற்பினை கொடுக்கவில்லை என்பதே ஆகும். இந்நிலையில் தான் திரைப்படம் வெளிய வந்த பொழுது அனைவரும் எங்கே சென்றீர்கள் என கோபமுடன் கேட்டிருக்கிறார் இயக்குனர் சுந்தர் சி அவர்கள்.