வீட்டில் ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் தாமரை மணிமாலை!!. பயன்படுத்தி பாருங்கள்!!

0
304

வீட்டில் ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் தாமரை மணிமாலை!!. பயன்படுத்தி பாருங்கள்!!

தாமரை மணிமாலை என்பது இயற்கையில் பஞ்சபூதங்களில் ஒன்றான நீர்நிலைகளில் இருந்து கிடைக்கக்கூடிய ஒன்று. மகாலட்சுமி தாமரையில் வசிப்பதால் வீட்டில் தாமரை விதைகளில் செய்யப்பட்ட மாலையை வைத்திருப்பது அவரை நம் வீட்டிற்கு வரவழைக்க செய்யும்.தாமரை மணிமாலை பயன்படுத்தும் முறைகள் பற்றி பார்ப்போம் வாங்க, காலையில் எழுந்தவுடன் குளித்துவிட்டு இந்த தாமரை மணிமாலையை அணிந்து கொள்வது மிக சிறப்பு.இரவு நித்திரைக்கு செல்லும் முன் இந்த தாமரை மணிமாலையை பூஜையறையில் வைப்பது நல்லது.தாமரை மணிமாலை நூலில் கோர்க்கப்பட்டு உள்ளதால் தண்ணீர் படாமல் பார்த்து கொள்ளவும்.தாமரை மணிமாலையை சுப நிகழ்வுகளில் கலந்து கொள்ளும்போது அணிந்து கொள்வது சிறப்பு. மேலும் அசைவம் சாப்பிடும்போதும் அசுப நிகழ்வுகளில் கலந்து கொள்ளும்போதும் தவிர்த்து கொள்வது நல்லது.

மாதம் ஒருமுறை சுத்தமான வேப்பெண்ணெயில் நனைத்த துணியை வைத்து துடைத்து வெயிலில் வைத்து உலர்த்தி பயன்படுத்தவும். வேப்பெண்ணெய் பயன்படுத்துவதால் எறும்புகள் மற்றும் பூச்சுகள் அடிக்காமல் பாதுகாக்கும்.தாமரை மணிமாலை வீட்டில் இருந்தால் ஏற்படும் பயன்கள்:தாமரை மணிமாலை தடைகளை நீக்கி உயர்வான வாழ்க்கைக்கு அஸ்திவாரம் இடுகிறது.தாமரை மணிமாலை நேர்மறை சக்திகளை உள்ளடக்கியது.

கடன் பிரச்சனைகள் தீர பணம் ஈர்க்கும் சக்தியாக செயல்படுகிறது.பொருளாதாரம் மேம்பட உதவுகிறது.பொருளாதாரம் நலிவடைவதில் இருந்து பாதுகாக்கிறது.வேலை கிடைக்காமல் சிரமப்படுபவர்களுக்கு நல்ல வழிகாட்டுதலை ஏற்படுத்துகிறது. தாமரை மணிமாலை ஒரு வீட்டில் இருக்கிறது என்றால் அனைத்து தடைகளும் விலகி ஐஸ்வர்யங்கள் பெருகும் என்பது நம்பிக்கை.

 

 

Previous articleசிறுநீரக கல் இருந்த இடமே இல்லாமல் போய்விடும்! ஐஸ் கட்டி போதும்!
Next articleஇதை சாப்பிட்டு பாருங்கள்!!சுவையான பொட்டேட்டோ கோஃப்தா பிரியாணி !..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here