கோவில்களில் இனி ஒலிபெருக்கிகள் பயன்படுத்த கூடாது? உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. மேலும் அனைத்து கோவில்களிலும் பண்டிகை போன்றவற்றை ரத்து செய்து சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் சேலத்தில் ஜாரி கொண்டலாம்பட்டியில் தேர்வுகள் முடியும் வரை கோவில் திருவிழாக்களை ஒத்தி வைக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றது. மாணவர்களின் பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு கோவில் திருவிழாக்களில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் 10, 11, 12 வகுப்புகள் தேர்வுகள் முடியும் வரை மாதாந்திர மின் நிறுத்தம் செய்யப்பட மாட்டாது எனவும் மின்வாரியத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில் நேற்று பதினொன்றாம் வகுப்பு பொது தேர்வு தொடங்கியது குறிப்பிடத்தக்கது. வரும் ஏப்ரல் மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி தற்போது இன்புளூயன்சா வைரஸ் வேகமாக பரவி வருவதினால் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை தேர்வினை ஒரு வாரத்திற்கு முன்னதாகவே அதாவது ஏப்ரல் 24ஆம் தேதிக்குள் முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.