மாற்றங்கள் தரும் வலிகள் பழகக்கூடும்.. வலித்து மரத்து அடங்கிய பின் வரும் தெளிவு! அழகு!  திடீரென்று காதல் முறிவை அறிவித்த பிரபல நடிகை!

Photo of author

By Parthipan K

விஜய் டிவியில் ஒளிபரப்பான “  கல்யாணம் முதல் காதல் வரை“  என்ற சீரியல் மூலம்  கதாநாயகியாக நடித்து சின்னத்திரைக்கு  அறிமுகமான பிரியா சங்கர், அதன் பின் பல முன்னணி நடிகர்களுடன்  படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார்.

இவருடன் பல நடிகர்களை சேர்த்து  கிசுகிசுக்கப்பட்டதால், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தான் கல்லூரியிலிருந்து காதலித்து கொண்டிருக்கும் ராஜவேலுவைப்பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியீடு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

அதன்பின் இவர்களுக்கு செல்ல சண்டைகள்பல தொடர்ச்சியாக வந்து கொண்டே இருக்கிறது. அந்த வரிசையில்  சில நாட்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “மாற்றங்கள் தரும் வலிகள் பழகக்கூடும், வலித்து மரத்து அடங்கிய பின் வரும் தெளிவு, அழகு” என்று கூறி காதல் முறிவை பற்றி பகிரங்கமாக  பதிவிட்டார்.இந்த சண்டைக்கு காரணம் கேட்ட ரசிகர்களுக்கு “அவருடைய காதலரான ராஜவேலுக்கு  சேர்க்கை சரியில்லை” என்று  பதில் அளித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் பவானி சங்கர்.