பிக்பாஸ் நிகழ்ச்சியில் நிரம்பி வழியும் காதல்! மக்கள் எடுத்த திடீர் முடிவால் காதலர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!!

Photo of author

By Sakthi

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நிரம்பி வழியும் காதல்! மக்கள் எடுத்த திடீர் முடிவால் காதலர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!!

பிக்மாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் யார் என்பதை பற்றிய தகவல் தற்பொழுது கிடைத்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறு சீசன்களில் இல்லாத வகையில் இந்த சீசனில் காதல் கண்டென்ட் மட்டும் குறையாமல் இருந்து வருகின்றது. இந்த சீசனில் போட்டிடாளர்களாக கலந்து கொண்ட மணி சந்திரா, ரவீனா இருவரும் ஆரம்பம் முதலே காதல் கண்டென்ட் வழங்கி வருகின்றனர். இவர்களை தொடர்ந்து கடந்த சில நாட்களாக மற்றுமொரு காதல் ஜோடி பிக்பாஸ் நிகழ்ச்சியில் உருவாகி ஓவராக காதல் கண்டென்ட் வழங்கி வருகின்றனர்.

யாரும் இல்லை அனைவருக்கும் தெரிந்த போட்டியாளர்கள் ஐஷூ மற்றும் நிக்சன் இருவரும் தான். இவர்கள் இருவரும் கடந்த வாரம் முழுவதும் காதல் தொடர்பான பேச்சு முத்தக் காட்சி போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர். அதன் பின்னர் கடந்த வாரம் ஞாயிற்றுக் கிழமையில் 5 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றதில் இருந்து ஐஷூ நிக்சனிடம் இருந்து விலகி இருக்கிறார்.

இருப்பினும் நிக்சன் ஐஷூவிடம் நெருங்கி பழகுவது தொட்டு பேசுவது கிண்ணத்தை கிள்ளுவது போன்ற செயல்களில் ஈடுபடுவது நெட்டிசன்கள் மத்தியில் பெரும் பேச்சு பொருளாகி இருக்கின்றது. இந்நிலையில் இவர்களை இப்படியே விட்டால் சரிபட்டு வராது என்று நினைத்த மக்கள் அனைவரும் இவர்களை பிரிக்க திட்டமிட்டுள்ளனர்.

அதாவது பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற இந்த வாரம் நாமினேசன் பட்டியலில் ஐஷூவும் உள்ளார். அதன்படி ஐஷூவிற்கு குறைவான வாக்குகளே கிடைத்துள்ளது. எனவே இந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது ஐஷூ என்பது தெரிய வந்துள்ளது.

அதாவது நாமினேசன் பட்டியலில் கடைசி நான்கு இடங்களில் குறைவான வாக்குகளை பெற்று கானா பாலா, அக்சயா, அன்னபாராதி, ஐஷூ இவர்கள் நான்கு பேர் உள்ளனர். இந்த நான்கு பேரில் தற்போதைய நிலவரப்படி ஐஷூ குறைவான வாக்குகளை பெற்றுள்ளார். எனவே இந்த வாரம் ஐஷூ வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதையடுத்து ஐஷூ இந்த வாரம் வெளியே சென்றால் நிக்சன் போட்டியில் கவனம் செலுத்துவாரா அல்லது அவரும் அதற்கு அடுத்த வாரம் வெளியேறுவாரா என்பது பற்றி பொறுத்திருந்து பார்க்கலாம்.