லவ் சிம்டம்ஸ்: உங்களுக்கு இந்த 8 அறிகுறிகள் இருந்தால் நீங்கள் ஒருவரை காதலிக்கிறீர்கள் என்று அர்த்தம்!!

Photo of author

By Divya

லவ் சிம்டம்ஸ்: உங்களுக்கு இந்த 8 அறிகுறிகள் இருந்தால் நீங்கள் ஒருவரை காதலிக்கிறீர்கள் என்று அர்த்தம்!!

ஆண்,பெண் யாராக இருந்தாலும் எந்த நேரத்திலும் ஒருவர் மீது காதல் ஏற்படலாம்.அதிலும் முதல் காதல் எப்பொழுதும் ஸ்பெஷல் என்பது மறுக்க முடியாத உண்மை.நீங்கள் ஒருவரை அறையாமலே நேசிக்க தொடங்கிவிட்டீர்கள் என்பதை கீழ்கண்ட அறிகுறிகள் மூலம் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.காதல் வந்து விட்டால் உங்களது வாழ்வில் இனம் புரியாத மகிழ்ச்சி பிறக்கும்.நீங்கள் அழகானது போன்ற உணர்வு உங்களது மனதில் உண்டாகும்.

தினமும் என்ன உடை அணியலாம்? எந்த உடை காதலிக்கும் நபருக்கு பிடிக்கும் என்று யோசிக்க தொடங்கிவிடுவீர்கள்.உங்களுக்கு எவ்வளவு வேலைகள் இருந்தாலும் நீங்கள் காதலிப்பவரை பற்றி மட்டும் சிந்திப்பதை உங்கள் மனம் தவறாது.

நீங்கள் ஒருவரை காதலிக்கிறீர்கள் என்பதற்கான அறிகுறிகள்:

1)உங்களை அறையாமலேயே பிடித்த நபரை பற்றி சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள்.அதுவரை நட்பாக பழகிய நீங்கள் அவரை காதலிக்கிறீர்கள் என்று தெரிந்த உடன் அவர் மற்றவர்களை காட்டிலும் புதுமையாகவும்,அழகாகவும் உங்கள் கண்ணிற்கு தெரியத் தொடங்குவார்.

2)நீங்கள் ஒருவரை நேசிக்க தொடங்கிவிடீர்கள் என்றால் உங்களையே அறியாமல் சிரிப்பீர்கள்.உங்களுக்கு பிடித்தவர் எது செய்தாலும் அது தங்களுக்கு சந்தோசத்தை மட்டுமே கொடுக்கும்.

3)கூட்டத்தில் 1000 பேர் இருந்தாலும் உங்கள் கண்கள் எப்பொழுதும் மனதிற்கு பிடித்த நபரை மட்டுமே தேடும்.

4)காதலிக்க தொடங்கிவிட்டீர்கள் என்றால் சாப்பிடுவதற்கு,தூங்குவதற்கு குட் பாய் சொல்லிவிடுவார்கள்.மனதிற்கு பிடித்தவரிடம் பேசும் பொழுது நேரம் கடப்பதே தெரியாது.

5)உங்கள் மனதிற்கு பிடித்தவருக்கு சிறிது முகம் வாடினாலும் தங்கள் மனம் தாங்காது.அதுவே உங்களுக்கு பிடித்த நபர் மகிழ்ச்சியாக இருந்தால் உங்கள் முகம் இன்பத்தில் பிரகாசிக்கும்.

6)உங்கள் மனதிற்கு பிடித்த நபரிடமே முதலில் தகவலை பரிமாறக் கொள்ள ஆசைக்கொள்வீர்கள்.

7)உங்கள் மனதிற்கு பிடித்தவரை பார்த்தாலே ஒருவித பாசிட்டிவ் எனர்ஜி உங்களுக்குள் ஏற்படும்.

8)உங்களுக்கு பிடித்த நபருடன் எதிர்காலத்தில் வாழ்ந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனை உங்களுக்கு தோன்றும்.