நாக சைதன்யாவுடன் காதல்!! பொன்னியின் செல்வன் பட நடிகை விளக்கம்!!
பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா அவர்களுடன் காதலில் இருப்பதாக எழுந்த செய்திக்கு பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகை விளக்கம் அளித்து அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் நாக சைதன்யா. இவர் இப்போது தமிழில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கஸ்டடி திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் 12ம் தேதி தமிழ், தெலுங்கு என்று இரண்டு மொழிகளில் வெளியாகவுள்ளது.
இதையடுத்து நடிகர் நாக சைதன்யாவுடன் நடிகை சோபிதா துலிபாலா அவர்கள் காதலில் இருப்பதாக தகவல்கள் பரவி வந்தது. இந்த தகவலுக்கு நடிகை சோபிதா துலிபாலா அவர்கள் விளக்கம் கொடுத்து பொய்யான தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை சோபிதா துலிபாலா. இதையடுத்து நாக சைதன்யா அவர்களை சோபிதா காதலிப்பதாக எழுந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இது குறித்து நடிகை சோபிதா துலிபாலா அவர்கள் அந்த வதந்திக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. சம்பந்தமே இல்லாதபோது அந்த வதந்திக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இது போன்ற பொய்யான தகவல்களுக்கு பயப்பட வேண்டியதும் இல்லை. பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெற்றியடைந்ததில் மகிழ்ச்சியில் உள்ளேன்” என்று கூறியுள்ளார்.