சமையல் காஸ் விலை உயர்வு

Photo of author

By Parthipan K

எண்ணெய் எரிவாயு நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும், முதல் தேதியில் எரிவாயு சிலிண்டர் விலையை மாற்றி அமைத்து வருகின்றன.

கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு தொடர்ந்து உயர்ந்து வந்த சிலிண்டர் விலை, கடந்த மார்ச் முதல் தொடர்ந்து 3 மாதமாக குறைந்தது.

இன்று (ஜூன் 1ம் தேதி) அறிவிக்கப்பட்ட மானியமில்லா வீட்டு எரிவாயு சிலிண்டர் விலை 37 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் மே மாதத்தில் 569.50 ரூபாயாக இருந்த காஸ் சிலிண்டர் விலை தற்போது 606.50 ரூபாய அதிகரித்துள்ளது.

இந்த விலை ஏற்றம் மானிய விலை காஸ் சிலிண்டர் விலையை பாதிக்காது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.