சூடான் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: தமிழர்கள் பலர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல்

Photo of author

By CineDesk

சூடான் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: தமிழர்கள் பலர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல்

CineDesk

Updated on:

சூடான் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: தமிழர்கள் பலர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல்

சூடான் நாட்டில் செராமிக் பொருட்கள் தயாரிக்கும் ஆலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 23 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளிவந்தூள்ளது. இதில் பலர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சூடான் தலைநகர் கார்டோம் என்ற நகரில் உள்ள செராமிக் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை மொத்தம் 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இவர்களில் இந்தியர்கள் மட்டும் 18 பேர் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த 18 இந்தியர்களில் எத்தனை பேர் தமிழர்கள் என்ற தகவல் வெளிவரவில்லை என்றாலும் இந்த ஆலையில் பல தமிழர்கள் வேலை செய்து கொண்டு வந்ததால் தமிழர்களின் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகம் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது

இந்த நிலையில் சூடான் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்கள் குறித்த தகவலை பெற வெளியுறவுத்துறை அமைச்சகம் பிரத்யேக தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது

சூடான் தீ விபத்து தொடர்பாக தகவல் அறிய +249-921917471 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இந்த ஆலையில் வேலை பார்க்கும் உறவினர்கள் இந்த எண்ணை தொடர்பு கொண்டால் அனைத்து விபரங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது

சூடான் நாட்டில் செராமிக் பொருட்கள் தயாரிக்கும் ஆலையில் உள்ள எரிவாயு டேங்கர் வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.