இந்திய அணியில் மிக முக்கிய வீரர்களில் ஒருவர் கே எல் ராகுல். இவர் ஒரு சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் இவர் தற்பொழுது இந்தியா-நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறார். இவர் சென்ற ஆண்டு ஐ பி எல் தொடரில் லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணியின் கேப்டனாக விளையாடினார்.
கடந்த ஆண்டு எந்த போட்டிகளிலும் சரியாக விளையாடவில்லை. பெங்களூருக்கு எதிரான போட்டியில் தோல்வியுற்றதால் லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணியின் உரிமையாளர் அவரை திட்டுவது போல் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி விமர்சனகளுக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.அதன் பின் கே எல் ராகுல் எந்த டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளிலும் கலந்து கொள்ள வில்லை
லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணியின் நிர்வாகம் அந்த அணியில் உள்ள வீரர்கள் வேறு எந்த போட்டியில் சிறப்பாக விளையாடினாலும் அவர்களை புகழ்ந்து இன்ஸ்டாகிராம் மற்றும் X தளத்தில் பதிவிட்டு வருகிறது. அந்த அணியின் சக வீரர்களை புகழ்ந்த போதிலும் அந்த அணியின் மிக முக்கிய வீரரான கேப்டன் கே எல் ராகுல் சிறப்பாக விளையாடிய போதிலும் எந்த பதிவும் செய்யவில்லை.
இப்போது டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறார். தற்போது நடைபெறும் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இடையிலான போட்டியின் வலை பயிற்சியின் போது விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு “பெங்களூரு பாய்ஸ் ” என பதிவிட்டிருந்தது.
அதனால் ஆர் சி பி அணி வரும் ஐ பி எல் ஏலத்தில் கே எல் ராகுலை தங்கள் அணிக்கு எடுக்கும் எனவும், அவர்தான் ஆர் சி பி அணியின் அடுத்த கேப்டன் என்றும் பல்வேறு கருத்துக்கள் இணையத்தளத்தில் கூறப்பட்டு வருகிறது.