குக் வித் கோமாளி பவித்ராவிற்கு அடித்த லக்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

0
120
Luck to score for Cook with clown Pavithra! Shocked fans!
Luck to score for Cook with clown Pavithra! Shocked fans!

குக் வித் கோமாளி பவித்ராவிற்கு அடித்த லக்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் அதிக அளவு ரியாலிட்டி ஷோக்கள் பிரபலமடைந்து வருகிறது அதில் பிக்பாஸ்,குக் வித் கோமாளி என பல நிகழ்சிகள் அடங்கும்.பிக்பாஸை விட அதிக அளவு ரசிகர்கள் கொண்ட ஷோ  தான் குக் வித் கோமாளி.இதில் வரும் கோமாளிகள் குக்குகளுடன் சேர்ந்து செய்யும் விஷயங்கள் பார்ப்பவர்களுக்கு காமெடியாக தெரிகிறது.

அதில் முக்கியமாக மணிமேகலை,புகழ்,சிவாங்கி,பாலா ஆகியோர் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர்.இவர்கள் குக்குகளுடன் சேர்ந்து நடத்தும் நகைச்சவை அனைத்தும் வலைத்தளங்களில் மிகவும் வைரலாகியது.இது முதல் சீசனிலேயே அதிக அளவிற்கு விஜய் டிவிக்கு டி.ஆர்.பி கொடுத்தது.அதில் சிறிதளவு மாற்றம் கூட இல்லாமல் இந்த சீசனும் டிஆர்பி ஏறியுள்ளது.

இதில் பல கோமாளிகளுக்கு படம் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் தான் உள்ளது.அந்தவகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் புகழுடன் பேர் ஆகி அனைவரின் மனதை வென்ற பவித்ராவுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமாக உள்ளது.தற்போது அவர் ஏ.ஜி.எஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தில் பவித்ரா நடித்து வருகிறார்.

இப்படத்தில் கதாநாயகனாக காமெடி நடிகர் சதீஸ் நடிக்கிறார்.இவருக்கு ஜோடியாக தான் பவித்ரா நடிக்க உள்ளார்.இப்படத்தை கிஷோர் ராஜ்குமார் இயக்குகிறார்.இப்படத்தின் படபிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.இப்படபிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது.இதனையடுத்து பவித்ரா காதாநாயகியாக மற்றொரு படத்தில் நடிக்க இருக்கிறார்.இப்படத்தை அறிமுக இயக்குனர் இயக்க உள்ளார்.நடிகர் கதிருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.இப்படம் குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள்  வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.