அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் மச்ச பலன்கள்!! உங்களுக்கு அந்த இடத்தில் மச்சம் இருக்கானு செக் பண்ணுங்க!!

Photo of author

By Divya

நமது உடலில் இயற்கையாக தோன்றுகின்ற கரும் புள்ளிகளை மச்சம் என்கிறோம்.இந்த மச்சம் பிறக்கும் போது உடலில் உருவாகிறது.சிலருக்கு வளரும் போது மச்சம் உருவாகிறது.இந்த மச்சங்கள் கருப்பு,பழுப்பு,சிவப்பு,பச்சை,மஞ்சள் உள்ளிட்ட நிறங்களில் காணப்படுகிறது.ஆன்மீகப்படி உடலில் இருக்கின்ற மச்சங்களை வைத்து அதிர்ஷ்ட பலன்களை அறிய முடியும்.

ஆண் மற்றும் பெண்களுக்கான மச்ச பலன்கள்

ஆண்களுக்கு புருவ மத்தியில் மச்சம் இருந்தால் தீர்க்க ஆயுள் உண்டாகும்.அதேபோல் நெற்றியின் வலது பக்கத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டம்,பண வரவு,திடீர் தன லாபம் உண்டாகும்.

வலது கண் பகுதியில் மச்சம் இருந்தால் பேரு,புகழ் கிடைக்கும்.ஆனால் இடது கண் பகுதியில் மச்சம் இருந்தால் உங்களுக்கு நெருக்கமானவர்களால் ஏதேனும் பிரச்சனை ஏற்படக் கூடும்.

வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் நற்பலன்கள் வந்து சேரும்.இடது கன்னத்தில் மச்சம் இருந்தால் வறுமை,தீராத கஷ்டங்கள் உண்டாகும்.

பெண்களின் கழுத்து பகுதியில் மச்சம் இருந்தால் தீர்க்க ஆயுள் உண்டாகும்.தலையில் மச்சம் இருந்தால் கோபம் மற்றும் பதட்டம் அதிகம் இருக்கும்.ஆண்களின் வலது தோள் பட்டையில் மச்சம் இருந்தால் ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்படும்.அதேபோல் பெண்களுக்கு இடது தோள் பட்டையில் மச்சம் இருந்தால் ஆன்மீகத்தில் நாட்டம் உண்டாகும்.

ஆண் பெண் இருவருக்கும் உதட்டில் மச்சம் இருந்தால் காதல் உணர்வு அதிகமாக இருக்கும்.வலது உள்ளங்கையில் எந்த இடத்தில் மச்சம் இருந்தாலும் நன்மைகள் மற்றும் அதிர்ஷ்டம் கிடைக்கும்.
அனால் இடது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் அது தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

தாடைக்கு கீழ் மச்சம் இருந்தால் புத்திசாலியாக இருப்பார்கள்.வயிற்றின் நடுப்பகுதியில் மச்சம் இருந்தால் பொறாமை குணம் கொண்டவராக இருப்பார்கள்.

இடது மார்பு பகுதியில் மச்சம் இருந்தால் சுயநலவாதியாக இருப்பார்கள்.தொப்புள் பகுதியில் மச்சம் இருந்தால் செல்வ செழிப்பு ஏற்படும்.முதுகில் மச்சம் இருந்தால் சொகுசு வாழ்க்கை கிடைக்கும்.முழங்கால் பகுதியில் மச்சம் இருந்தால் சகல செல்வங்களையும் பெறுவார்கள்.