லைகா தயாரிப்பு நிறுவனம் அளித்த மாபெரும் தொகை! நன்றி கூறிய முதல்வர்!

Photo of author

By Kowsalya

நாட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைக்கா புரொடக்ஷன்ஸ் ஒரு உன்னத செய்கையை செய்துள்ளது. பல செய்திகள் வெளிவந்த நிலையில் உள்ளது. கொரோண நிவாரணத்திற்காக பெரும் தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளது.

அல்லி ராஜா சுபாஸ்கரன் சார்பில், லைகா தயாரிப்பு நிறுவனம் தமிழக மாண்புமிகு முதலமைச்சர் எம் கே ஸ்டாலின் அவர்களிடம் 2 கோடி ரூபாய். , சென்னையில் உள்ள செயலகத்தில் கொரோண நிவாரண நிதியை வழங்கினார்கள்.

திரு. ஜி.கே.எம் தமிழ் குமரன், திரு. நிருதன், மற்றும் திரு. கவுரவ் ஆகியோர் முதலமைச்சரை சந்தித்ததற்காக மிகவும் மரியாதைக்குரிய விசயமாக உள்ளது என கூறியுள்ளனர். இந்த தொகை தமிழக முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு செல்லும் என்றும் தெரிவித்து உள்ளனர்.

லைகா புரோடக்சன்ஸ் அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களின் சார்பில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்து கொரோனா நிவாரணப் பணிக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 2 கோடிக்கான காசோலையை லைகா வழங்கியது என டைமண்ட் பாபு டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.