சந்திர கிரகணம் முழு நிலவு நாளில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் பூமி வரும் சூரியன் பூமி மற்றும் சந்திரன் 3ம் ஒரே நேர்கோட்டில் இருக்கும் சமயத்தில் சந்திர கிரகணம் உண்டாகும். முழு நிலவு பூமியின் நிழலின் கீழ் வரும் போது முழு சந்திர கிரகணமும், சந்திரனின் ஒரு பகுதி பூமியின் நிழலின் கீழ் வரும் போது பகுதி சந்திர கிரகணமும் உண்டாகும்.
அதன் அடிப்படையில் இன்று முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. நாட்டில் அனைத்து பகுதிகளிலும் முழு சந்திர கிரகணத்தை பார்க்க முடியாது. ஏனென்றால் சந்திர உதயத்திற்கு முன்பாகவே மொத்த நிகழ்வும் நடந்து கொண்டிருக்கும். முழு மற்றும் பல்வேறு பகுதி வடிவ நிலைகளின் முடிவினை நாட்டின் கிழக்குப் பகுதியில் காண முடியும் என்கிறார்கள்.
நாட்டின் கிழக்குப் பகுதிக்கு செல்ல செல்ல சந்திர கிரகணத்தை பார்க்க முடியும் இந்த பகுதிகளில் சந்திர கிரகணம் பொதுவாக அனைத்து இடங்களிலும் ஒரே சமயத்தில் உண்டாகும் மேற்கு வானில் சூரியன் மறையும்போதும், கிழக்கு வானில் நிலவு வெளிப்படும் சமயத்தில் குறைவான காலகட்டத்தில் பகுதி சந்திர கிரகணத்தை பார்க்க முடியும்.
நாட்டின் பெரும்பகுதியில் கிரகணம் தெரியாது. ஆனாலும் கல்கத்தாவில் உள்ளிட்ட கிழக்கு பகுதிகளில் மட்டுமே இதன் இறுதியில் நிலைகளை காண முடியும் கல்கத்தாவில் சந்திரன் கிழக்கு அடிவானத்திலிருந்து மாலை 4.52 மணிக்கு உதயமாகும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. மேகமூட்டமில்லாமல் இருந்து வானத்தில் வெளிச்சம் குறைந்தால் 5.11 மணி வரையில் நிகழும் முழு சந்திர கிரகணத்தை பார்க்க வாய்ப்பு இருக்கிறது சந்திர கிரகணம் முடியும் பிற்பகுதியை இந்தியாவின் கிழக்குப் பகுதியில் மக்கள் காண முடியும்.
தமிழகத்தை பொறுத்தவரையில் சென்னையில் சந்திர கிரகணம் இந்திய நேரப்படி 5 மணி 39 நிமிடங்கள் தொடங்கி அடுத்த நாள் காலை 8.59 மணி அளவில் முடிவடையும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.
வெள்ளை ஒளிக்குள் 7 நிறங்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே . அதில் நீல ஒளியானது பூமியின் வளிமண்டலத்தில் ஒளி சிதறல் அடைகிறது. இதன் காரணமாக தான் வானம் நீல நிறமாக காட்சி தருகிறது. அதேபோல ஒலியானது வளிமண்டலத்தின் வழியே செல்லும்போது சிவப்பு நிறம் ஆனது ஒளிவிலகல் அடைகிறது. அது நிலவின் மீது படுகிறது. இதன் காரணமாக, நிலவு சிவப்பு நிறமாக காணப்படுகிறது.
இனி இனி முழு சந்திர கிரகணம் வரும் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் தேதி அன்று நிகழும் என்றும், ஒரு பகுதி சந்திர கிரகணம் அடுத்த வருடம் நிகழும் என்றும் கூறப்பட்டுள்ளது.