டுவிட்டரின் புதிய விதிமுறைகள்! பின்பற்றவில்லை என்றால் கணக்குகள் முடக்கப்படும்!

0
131
Twitter's New Rules! Accounts will be disabled if not followed!
Twitter's New Rules! Accounts will be disabled if not followed!

டுவிட்டரின் புதிய விதிமுறைகள்! பின்பற்றவில்லை என்றால் கணக்குகள் முடக்கப்படும்!

உலகின் பணக்காரரில் ஒருவரான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார்.அவர் தற்போது எவரும் எதிர்பாரத வகையில் பல திடீர் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.அந்த வகையில் டுவிட்டர் நிறுவனத்தில் 75சதவீத ஊழியர்களை பணியில் இருந்து நீக்கம் செய்ய ஆள்குறைப்பு நடவடிக்கையும் எடுத்துள்ளார்.

மேலும் புளூடிக் கணக்குகளுக்கு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.டுவிட்டர் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மெயில் மூலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரையில் கால அவகாசம் வழங்கப்படும்.அதற்குள் நீங்கள் வேறு வேலை பார்த்துக்கொள்ளுங்கள்.அதனையடுத்து நிறுவனத்தின் லேப்டாப் போன்றவைகளை கொண்டுவந்து சமர்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதனையடுத்து தங்களின் நோக்கம் எப்பொழுதும் டுவிட்டர் பயனாளர்களுக்கு சுதந்திரமான மற்றும் பாதுகாப்பான குழலை உருவாக்கி தருவதே என தெரிவித்துள்ளனர்.தனிநபர் அல்லது குழுவாகத் தூண்டப்படும் வன்முறையில் இருந்து பாதுகாக்கப்படுவீர்கள் ,தீவிரவாத நடவடிக்கைகளில் இருந்தும் பாதுகாக்கப்படுவீர்கள் என டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டுவிட்டரானது குழந்தை பாலியல் வன்கொடுமையை முழுமையாக எதிர்கின்றது.குழுவாக ஒருவரை குறிவைத்து கருத்தினால் தாக்கும் நடவடிக்கை   நிறுத்தப்படும்.மேலும் ஒருவரை வெறுக்கும் வகையில் பதிவிடக் கூடாது,அடுத்தவரின் இனம் ,தேசியம் ,பாலினம் ,உருவம் ,மதம் ,வயது ,நோய் ,உடல்நிலை போன்றவற்றை வைத்து டுவிட்டரில் பேசக்கூடாது.தாக்குதல் ,வன்முறை போன்றவற்றை ஆதரித்தால் தனிநபர் கணக்குகள் உடனடியாக நீக்கப்படும்.

ஆபாச வீடியோ ,புகைப்படங்கள் ,உணர்வுகளை துன்புறுத்தும் வகையில் புகைபடங்கள்,வீடியோக்கள் பதிவிடக்கூடாது.மேலும் தாக்குதல் வீடியோக்கள் மற்றும் பாலியல் வன்கொடுமை வீடியோக்களை செய்தி நிறுவனக்களும் பதிவிடக்கூடாது.மற்றவர்களின் தனிப்பட்ட விவரங்களை அவர்களின் அனுமதியின்றி பதிவிடக்கூடாது.போன்ற சில விதிமுறைகளை டுவிட்டர் நிறுவனம் விதித்துள்ளது.

author avatar
Parthipan K