புதிய பழமொழிகளை உருவாக்கி தமிழுக்கு தொண்டாற்றும் ஸ்டாலின்

0
189

தமிழகத்தின் எதிர்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் அவர்கள் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

அண்மைய தேர்தல் பிரச்சாரத்தின் போது நாங்கள் சொல்வதை தான் சொல்வோம், செய்வதைத் தான் செய்வோம் என்று உளறிக்கொண்டு இருந்தார்.

இதை பார்த்த வேட்பாளர் செய்வதறியாது திகைத்து கொண்டிருந்தார். ஒவ்வொரு பேச்சிலும் இப்படி உளறி தமிழுக்கு மிகப்பெரிய அளவில் தொண்டாற்றி கொண்டு இருக்கிறார் எதிர்கட்சி தலைவர்.

முன்னதாக நடந்த இடைத்தேர்தல் பிரச்சார கூட்டத்தில் எண்பத்தி ஏழும் ஒன்பதும் நூற்றி ஏழு என புதுக்கணக்கை போட்டு காண்பித்தார். இம்மாதிரியான நிகழ்வுகள் திமுக தொண்டர்களிடைய ஸ்டாலினின் ஆளுமையை கேள்வி குறியாக்கி உள்ளது.

Previous articleபிலிப்பைன்ஸ் நாட்டில் நிலநடுக்கம்- ஐந்து பேர் பலி
Next article5 சதவீத அகவிலைப்படி உயர்வு! தமிழக அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி