முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை குறித்து பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன்!

Photo of author

By Vinoth

முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை குறித்து பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன்!

Vinoth

Updated on:

முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை குறித்து பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன்!

மூன்று தினங்களுக்கு முன்னர் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்அவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் மு க ஸ்டாலின் அவர்கள் கொரோனா பாதிப்பு காரணமாக தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். மு.க ஸ்டாலின் கூறுகையில் தனது டுவிட்டரில் நான் தனிமையில் உள்ளேன் என்று பதிவிட்டு இருந்தார்.

இது குறித்து மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், “எனக்கு ஒரு நாள் முழுவதும்  உடற்சோர்வு சற்று அதிகமாக இருந்தது. பரிசோதித்ததில் கோவிட் 19 உறுதிசெய்யப்பட்டது. பரிசோதித்த மருத்துவர்கள் தனக்கு கொரோனா தொற்று உறுதியானதை தெரிவித்தார்கள். தொற்று காரணமாக என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என்றார். பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்” என்று தனது தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிடி ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ள சென்ற நிலையில் அவர் இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இரண்டு நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் முதல்வரின் உடல்நிலை குறித்து மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமண்யன் இன்று பேசியுள்ளார். பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர் “முதல்வரின் உடல்நிலை நன்றாக உள்ளது” எனக் கூறியுள்ளார்.