ஓடிடியில் நல்ல வரவேற்பைப் பெற்ற விஜய் சேதுபதி படம்… இயக்குனருக்கு அடித்த ஜாக்பாட்!

Photo of author

By Vinoth

ஓடிடியில் நல்ல வரவேற்பைப் பெற்ற விஜய் சேதுபதி படம்… இயக்குனருக்கு அடித்த ஜாக்பாட்!

Vinoth

Updated on:

ஓடிடியில் நல்ல வரவேற்பைப் பெற்ற விஜய் சேதுபதி படம்… இயக்குனருக்கு அடித்த ஜாக்பாட்!

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கிய மாமனிதன் திரைப்படம் ஜூன் 24 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பது மட்டும் இல்லாமல், தயாரிப்பாளர் திரைக்கதை எழுத்தாளர்,வசனகர்த்தா என பல்துறை வித்தகராக இருந்து வருகிறார். கதாநாயகனாக மட்டும் நடிப்பது என்றில்லாமல், குணச்சித்திர வேடங்கள், வில்லன் வேடம் மற்றும் கௌரவ வேடம் என்று கலக்கி வருபவர்.

அவர் வில்லனாக நடித்த பேட்ட, மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன. இந்நிலையில் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான மாமனிதன் திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளைக் குவித்தது. ஜூன் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்தது.

இதனால் ஜூலை 15 ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடியில் வெளியானது. திரையரங்குக்கு நேர்மாறாக ஓடிடியில் படத்துக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. அதிகளவில் பார்வையாளர்கள் இந்த படத்தைப் பார்த்து வருகின்றனர்.

இந்த வரவேற்பை அடுத்து ஆஹா தமிழ் ஓடிடி இப்போது இயக்குனர் சீனு ராமசாமியை அணுகி நேரடி ஓடிடி படம் ஒன்றை இயக்கித் தர கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நல்ல படம் என்ற பாராட்டப்பட்டும் திரையரங்குகளில் ஆதரவு கிடைக்காத மாமனிதன் இப்போது ஓடிடியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.