திட்டத்தை தொடங்கி வைத்த மூன்றே நாட்களில் இயந்திரம் பழுதான அவலம்! எல்லாம் நம்ம ஊருலதான்!

0
31
machine broke down within three days of starting the project
machine broke down within three days of starting the project

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஸ்மார்ட் குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதாவது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கொண்டு வந்த அம்மா குடிநீர் திட்டத்தின் upgrade வெர்சன் தான் இந்த ஸ்மார்ட் குடிநீர் திட்டம்.

திட்டத்தை முதல்வர் துவங்கி வைக்கும் நேரத்திலேயே அந்த பைப்பில் இருந்து தண்ணீர் சரியாக வரவில்லை. பின்னர் எல்லாரும் சேர்ந்து போராடி தண்ணீர் வரவைத்து முதல்வரிடம் குடிக்க கொடுத்தனர்.

இந்நிலையில் இந்த திட்டம் தொடங்கி 3 நாட்களே ஆகியுள்ள நிலையில் அந்த குழாய் மீண்டும் பழுதடைந்துவிட்டது. இயந்திரத்தில் தண்ணீர் பிடிக்க சென்ற மக்களின் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்ததால் யாரும் தண்ணீர் பிடிக்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். ஸ்மார்ட் குடிநீர் திட்டம் தொடங்கி இன்னும் மூணு நாள் கூட ஆகல, அதுக்குள்ளயும் மெஷின் ரிப்பேர் ஆகிருச்சு, என்னதான் இந்த அரசாங்க அதிகாரிங்க பண்ணுறாங்களோ தெரியல என்று சமூக வலைத்தளங்களில் மக்கள் புலம்பி வருகின்றனர்.

Previous articleஜனநாயகன் படத்தின் வெளிநாட்டு உரிமம் இத்தனை கோடியா? ரஜினியவே தூக்கி அடிச்சுட்டாரே!
Next articleஎன் குழந்தைகளுக்கு ஆங்கிலம் தெரியாது! குழந்தைகள் குறித்து ஓப்பனாக பேசிய நமீதா!