மாதாம் ரூ 1000 கிடைக்கவில்லையா.. இதோ முதல்வர் சொன்ன முக்கிய அறிவிப்பு!! இதை கட்டாயம் நோட் பண்ணிக்கோங்க!!

0
35

DMK: திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கழித்து தான் தனது தேர்தல் வாக்குறுதியில் கூறிய மகளிர் உரிமைத் தொகையை அறிமுகப்படுத்தியது. இது கிட்டத்தட்ட இரண்டு கோடிக்கும் மேற்பட்டோர் தற்போது வரை பயனடைந்து வருகின்றனர். ஆரம்ப கட்டத்தில் இந்த உரிமை தொகை கிடைக்க பல்வேறு வரைமுறைகளை அமல்படுத்தியது. இதனால் பலரும் அதிருப்தி அடைந்த நிலையில் நாளடைவில் சில வரைமுறைகளுக்கு தளர்வு கொடுத்தது.

அதாவது கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகளுக்கு இந்த உரிமைத்தொகை கிடைக்காது என கூறியிருந்தனர். இதனைத் தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிக்கும் கிடைக்கும் என தெரிவித்தனர். மேலும் பெண்கள் மறுவாழ்வு மையத்தில் இருப்பவர்களுக்கும் இந்த உரிமை தொகை கிடைக்கும். அதிலும் புதிதாக ரேஷன் அட்டை வாங்கியவர்களுக்கு இந்த உரிமை தொகை கிடைப்பதில் சிக்கல் இருந்தது.

இதனை விரிவாக்கம் செய்யும் வகையில் இனி வருடம் தோறும் உரிமைத்தொகை கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும். அதிலும் இது ரீதியாக முகாம் அமைத்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என்ற அறிவிப்பை சட்டப்பேரவையில் கூறியிருந்தனர். அதன்படி ஜூலை மாதம் இதற்கான முகாம்கள் தமிழகமெங்கும் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக செப்டம்பர் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் விடுபட்ட மகளிர் அனைவருக்கும் ரூ 1,000 உரிமை தொகை கட்டாயம் கிடைத்து விடும் என திருப்பூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Previous articleகிருஷ்ணா செல்போனில் சிக்கிய கோட் Word.. அடுத்தடுத்து மாட்டப்போகும் திரை பிரபலங்கள்!! 
Next articleஇந்த மாதிரியான விஷயங்களை விஜய் எப்பவும் விரும்பமாட்டார்! புஸ்ஸி ஆனந்த் ஓபன் டாக்!