கங்குவா திரைப்படத்தின் புதிய அப்டேட் கொடுத்த மதன் கார்க்கி… படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள்!!

0
133

 

கங்குவா திரைப்படத்தின் புதிய அப்டேட் கொடுத்த மதன் கார்க்கி… படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள்…

 

நடிகர் சூரியா நடிப்பில் உருவாகி உள்ள கங்குவா திரைப்படத்தை பற்றி பாடலாசிரியர் மதன் கார்கி அவர்கள் புதிய தகவல் ஒன்றை கூறியுள்ளார். இதனால் கங்குவா திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

எதற்க்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சூரியா அவர்கள் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். கங்குவா திரைப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பட்டானி கதாநாயகியாக நடிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் கங்குவா திரைப்படத்திற்கு இசையமைத்தாள்ளார்.

கங்குவா திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர்கள், டீசர் வீடியோ எல்லாம் சமீபத்தில் சூரியா அவர்களின் பிறந்தநாளின் பொழுது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. மேலும் கங்குவா திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே 500 கோடி ரூபாய் வரை பிரி பிசினஸ் செய்துள்ளது.

 

நேற்று நடிகர் சூரியா அவர்களின் சிக்ஸ் பேக் புகைப்படம் வெளியாகி இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பயவியது. இந்நிலையில் பாடலாசிரியர் மதன் கார்க்கி அவர்கள் கங்குவா திரைப்படம் குறித்து புதிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

 

கங்குவா திரைப்படம் குறித்து பாடலாசிரியர் மதன் கார்க்கி “கங்குவா திரைப்படம் ஒரு புதுமையான உலகம். மேலும் இது புதியதொரு அனுபவம். இயக்குநர் சிவா அவர்களுடன் சேர்ந்து நான் கங்குவா படத்திற்காக பணியாற்றி வருகிறேன். கங்குவா திரைப்படத்தில் பாடல் ஒன்றையும் நான் எழுதியுள்ளேன். சூரியா சாரின் சிறந்த நடிப்புக்கு கங்குவா திரைப்படம் உதாரணமாக, சிறந்த நடிப்பின் வெளிப்பாடாக இருக்கும். கிலிம்ப்ஸ் வீடியோவில் வந்த மாறுபட்ட தமிழ் பேச்சு முறை தான் கங்குவா திரைப்படத்தில் இருக்கும். இதை அனைவருக்கும் புரியும்படி எடுத்துள்ளோம்” என்று கூறினார்.

 

Previous articleஹிமாச்சல பிரதேசத்திற்கு 200 கோடி நிவாரணம்… மத்திய அரசு நிவாரணம் வழங்க ஒப்புதல்…
Next articleஒரு இரவு இதை தடவிட்டு படுங்க..தொப்பை காணாமல் போய்விடும்!!