அதிமுக அவைத்தலைவர் குறித்து எடப்பாடி பழனிச்சாமியிடம் மதுசூதனன் வைத்த கோரிக்கை

0
154

அதிமுகவின் அவைத்தலைவரை நியமிக்கப்படுவது குறித்து தற்போதுள்ள அவைத்தலைவரான மதுசூதனன் எடப்பாடி பழனிச்சாமியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்றைய முன்தினம் ஆகஸ்டு 26 அன்று அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் வீட்டிற்கு திடீரென சென்று நலம் விசாரித்திருந்தார்.

இது அதிமுகவின் அரசியல் காரணங்களுக்காக வியூகங்கள் எடுப்பதற்கான சந்திப்பாகவே இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனால், மதுசூதனன் சில காலமாகவே முதுமை காரணமாக ஓய்வெடுத்து வருகிறார். சில மாதங்கள் முன்புதான் அவருக்கு இதயம் தொடர்பான ஆஞ்சியோ சிகிச்சையும் செய்யப்பட்டிருந்தது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக வீட்டை விட்டு வெளியே வராமல் மிகவும் பாதுகாப்பாக வீட்டிலேயே இருந்து வருகிறார்.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னர் வீட்டிற்குள்ளேயே அவர் கீழே விழுந்ததால், கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கும் இந்த நிலையில் தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல் அறிந்து அவரது வீட்டுக்கே சென்றார்.

மதுசூதனின் உடல் நலம் பற்றி விசாரித்து விட்டு கட்சியின் தற்போதைய நிலவரம் பற்றியும் பேசியிருக்கிறார்.

மதுசூதனனின் இந்த வயது முதிர்ந்த நிலையில் இருந்துகொண்டு கட்சியின் அவைத் தலைவர் பதவியில் தொடர வேண்டுமா என்பது குறித்தும், அது அவருக்கு தொந்தரவாக இருக்குமா என்பது குறித்தும் எடப்பாடி பழனிச்சாமி கேட்டறிந்தார் என கூறப்படுகிறது.

மேலும், அங்கு அவரைப் பார்க்க வரும் பக்கத்து நிர்வாகிகளைக் கூட மதுசூதனனால் அடையாளம் காண முடியவில்லை என்றும் எடப்பாடிக்குத் தகவல் தெரிந்ததுதாலேயே அங்கு சென்றுள்ளார்.

இதனடிப்படையில் மதுசூதனனிடம் உடல் நலம் விசாரித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, “உங்களை கட்சியில் இருந்து நாங்கள் மிகவும் தொந்தரவு செய்கிறோமா? கட்சிப் பணியில் சுமையேதும் உள்ளதா? என்று கேட்டிருக்கிறார்.

Madhusoodanan's request to Edappadi Palanichamy regarding the AIADMK leader
Madhusoodanan’s request to Edappadi Palanichamy regarding the AIADMK leader

அதன்பிறகு மதுசூதனன் கூறியதாவது, “இந்தக் கட்சிக்காக நீண்ட காலமா உழைத்து வருகிறேன். அம்மா கொடுத்த கௌரவமான பதவியாகத்தான் நான் இதனைப் பார்க்கிறேன்.

நீங்களும் மதிப்புடன் தான் வைத்து நடத்துகிறீர்கள். நான் இருக்கின்ற வரையில் இந்த பதவியில் இருந்து விடுகிறேனே. போகும்போது கௌரவமா போய் சேர்ந்திக்கிறேன்.” என்று மதுசூதனன் முதல்வர் எடப்பாடியிடம் கூறியிருக்கிறார்.

அப்போது கைகளை தூக்கி மதுசூதனனை நோக்கி வணங்கியபடி சம்மதித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி.

இந்த நிலையிலேயே அடுத்த அவைத் தலைவர் யார் என்பது பற்றிய கருத்துக்களும் அதிமுகவில் பேசத் துவங்கிவிட்டதாக அதிமுக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Previous articleபிற மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வர அனுமதி:! தமிழக அரசின் அதிரடி தளர்வு!
Next articleநீட் தேர்வு குறித்த முதலமைச்சர் பழனிச்சாமியின் நிலைப்பாடு: திமுக சும்மா விடாது என ஸ்டாலின் பாய்ச்சல்