அதிமுகவின் முக்கிய தலைவர் கவலைக்கிடம்! அப்பல்லோ விரைந்த ஓபிஎஸ்!

Photo of author

By Sakthi

சென்ற 2016 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்த பின்னர் அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் எழுந்தது. ஓபிஎஸ் ராஜினாமா அதோடு தர்மயுத்தம் என்று பல்வேறு பிரச்சனைகள் எழுந்தது.அதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தியானத்தில் அமர்ந்த சமயத்தில் முதல் முறையாக அவருக்கு ஆதரவு தெரிவித்தவர் மதுசூதனன்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளுக்கு பின்னர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின்னர் சசிகலா சிறைக்கு சென்ற பிறகு ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்டோர் ஒன்றாக இணைந்தனர். இதில் அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவி முற்றிலுமாக நீக்கப்பட்டு இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைப்பாளர் என்று பல பதவிகள் புதிதாக உருவாக்கப்பட்டது. அதில் மதுசூதனன் அவர்களுக்கு அதிமுக அவைத் தலைவர் என்ற பதவி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், அவர் மூச்சுத் திணறல் காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தற்சமயம் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் கிடைக்கிறது.மூச்சுத்திணறல் காரணமாக, அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிற அவருடைய உடல்நிலை சற்று கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதோடு இயல்பாக சுவாசிக்க அவர் சிரமப்பட்டு வருவதால் அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், முன்னாள் துணை முதலமைச்சர் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ் இந்த செய்தியை கேட்டவுடன் அப்பல்லோ மருத்துவமனைக்கு விரைந்தார். அவருடைய உடல்நலம் தொடர்பான விவரங்களை விசாரணை செய்தார். சசிகலாவிற்கு எதிராக தர்ம யுத்தத்தை ஓபிஎஸ் தொடங்கிய சமயத்தில் அவருக்கு ஆதரவளித்த முக்கிய தலைவர் மதுசூதனன் என்பது குறிப்பிடத்தக்கது.