மதிமுகவின் மூத்த தலைவர் திடீரென்று கட்சியிலிருந்து விலகல்! துரை வைகோவின் அதிரடியான பேச்சு தான் காரணமா?

Photo of author

By Sakthi

மதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் வைகோ கட்சி நிர்வாகம் தொடர்பான ஒரு கூட்டத்தில் ஒரு முக்கிய முடிவை மேற்கொண்டார்.

அப்போது அவர் அந்த முக்கிய முடிவை மேற்கொள்வதற்கு அந்த கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களுமே காரணமாக இருந்தார்கள். இந்த நிலையில் அவர் எடுத்த முக்கிய முடிவு என்னவென்று தற்போது நாம் பார்ப்போம்.

அதாவது கட்சி தொடங்கி பல வருடங்கள் ஆகிவிட்டது. இனி இந்த கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது என்று வைகோ பேசி வைக்க. உடனடியாக கட்சி நிர்வாகிகள் அனைவரும் தங்களுடைய மகனை அரசியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று வைகோவிடம் கோரிக்கை வைத்தனர்.

ஆனால் அதற்கு ஆரம்பத்தில் வைகோ சம்மதம் தெரிவிக்கவில்லை. பின்னர் கட்சியினர் விடாப்பிடியாக இருக்கவே கட்சியினரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டார்.

அதனடிப்படையில் மதிமுகவின் தலைமை நிலைய செயலாளராக வைகோவின் மகன் துரை வைகோவை நியமனம் செய்தார்.

ஆனால் அவரை ஏன் அரசியலுக்கும் கொண்டு வந்தோம் என்று அவருக்கு ஆதரவு தெரிவித்து அரசியலுக்குள் அழைத்த அதிமுகவின் நிர்வாகிகளே தற்போது கடிந்து கொள்ளுமளவிற்கு சில சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன.

அதாவது அந்தக் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோவின் சர்ச்சைக்குரிய பேச்சு மூத்த நிர்வாகிகளை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் வளையாபதி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

அந்த கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ மாமனிதன் வைகோ என்ற ஆவண படத்தை தயார் செய்திருக்கிறார். அதனை தென் மாவட்டங்களில் இருக்கின்ற திரையரங்குகளில் வெளியிட்டு கட்சியினரை பார்க்க அழைக்கிறார். சில கிராமங்களில் படம் பார்க்க கட்சியினர் வரவில்லை என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக அதிருப்தியடைந்த துரை கட்சி நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் கோவில்பட்டியில் பேசும்போது மதிமுகவுக்கு விசுவாசமாக இருப்பவர்கள் உழைப்பவர்கள் மட்டும் தான் தேவை. மற்றவர்களுக்கு கதவு திறந்து வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் வெளியேறலாம். தயவு தாட்சண்யம் பார்க்க மாட்டேன் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்ற முடிவு தான் எடுப்பேன் என தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் வளையாபதி தன்னுடைய அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, துரை வெளியேறச் சொன்னதை ஏற்றுக் கொள்கிறேன். தொடக்கத்தில் 11 பேர் கொண்ட குழுவில் இடம் பெற்று கட்சிப்பணியை ஆரம்பித்தேன். குப்பை கழிவுகள் இருக்குமிடத்தில் கூட சுவர் விளம்பரம் செய்தோம்.

அந்த காலகட்டத்தில் டிஜிட்டல் பேனர்கள் இல்லை என்னைப் போன்ற மூத்த தலைவர்கள் இளைஞர்களுக்கு வழிவிட்டு கட்சி வளர்ச்சிக்கு உதவ வேண்டும் அதற்கு முன்னுதாரணமாக நான் பதவியிலிருந்து விலகுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் மதிமுகவினர் பதிவு

துரை எப்போது சர்வாதிகாரியாக மாறினார்? யார் இவர் இவருக்கும், கட்சிக்கும் என்ன சம்பந்தம்? வாரிசு அரசியலை எதிர்த்து 5 பேர் தீ குளித்து அப்பாவி தொண்டர்களின் வியர்வையில் உண்டான கட்சி இது. இவர் என்ன கட்சிக்கு தலைவரா? இவருக்காகவா தொண்டர்கள் கட்சியில் இருக்கிறார்கள்? வாழ்க்கையில் செட்டில் ஆகி விட்டு அரசியலுக்கு வந்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்கள்.

வைகோவிற்காக உழைத்து, உழைத்து ஓடாய் தெரிந்தவர்களை வெளியேறச் சொல்ல அவரே விரும்ப மாட்டார். இதனை வைகோ கண்டிக்கிறாரா? அல்லது ஊக்குவிக்கிறாரா? முதலில் துரை வெளியேறட்டும் என்றும் பதிவிட்டுள்ளார்கள்.